150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் முழு சூரிய கிரகணம் நாளை நிகழ இருக்கிறது. இந்த அரிய நிகழ்வானது ஆஸ்திரேலியாவில் நாளை நடக்கிறது. 


இந்த ஆண்டு பூமியில் உள்ள பொதுமக்கள் நான்கு கிரகணங்களை பார்க்க இருக்கின்றன. இவற்றில் இரண்டு சூரிய கிரகணமும், இரண்டு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த 2023ம் ஆண்டின்  முதல் சூரிய கிரகணம் ஏப்ரம் 20ம் தேதி (நாளை) ஒரு அரிய ஹைப்ரிட் சூரிய கிரகணம் நிகழும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமாக நாசா தெரிவித்துள்ளது. இந்த வானியல் நிகழ்வானது 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு சில இடங்களில் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹைஃப்ரிட் சூரிய கிரகணம் பற்றிய தகவலை வெளியிட்டு, அதை நீங்கள் எங்கு எப்படி பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது. 






ஏப்ரல் 20ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் உள்ள மக்கள் ஹைப்ரிட் சூரிய கிரகணத்தை காண முடியும். இது இந்திய மற்றும் பசிபில் பெருங்கடல்களை கடந்து செல்லும். 


சூரியன், சந்திரன் மற்றும் பூமி முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ நேர்கோட்டில் இருக்கும்போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கிறது மற்றும் அதன் நிழல் பூமியில் விழுகிறது. சிறப்பு உபகரணங்கள் இல்லாமல் பெரும்பாலான கிரகணங்களில் சூரியனை நேரடியாகப் பார்ப்பது பாதுகாப்பற்றது. 


எத்தனை வகையான கிரகணங்கள் உள்ளன?


கிரகணங்கள் பல வகைப்படும். முழு, வளைய, ஹைப்ரிட் மற்றும் பகுதி என அழைக்கப்படும். முழு கிரகணத்தில், சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைப்பதால், சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் பூமியில் உள்ளவர்களின் கண்களுக்கு தெரியும். 


வளைய கிரகணத்தில், சந்திரன் சூரியனுடன் முற்றிலும் நேர்கோட்டில் உள்ளது, ஆனால் சூரியனை முழுமையாக மறைக்க பூமியின் மேற்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.


பகுதி, முழு மற்றும் வளைய கிரகணம்


சூரியனின் ஒரு சிறிய பகுதிக்கு முன்னால் சந்திரன் வந்து ஒளியைத் தடுக்கும் போது ஒரு பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஒரு வளைய சூரிய கிரகணத்தில், சந்திரன் சூரியனுக்கு இடையில் வந்து ஒளியைத் தடுக்கிறது, பின்னர் சுற்றிலும் ஒரு பிரகாசமான ஒளி வட்டம் உருவாகிறது, அது நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது. மறுபுறம், பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரு நேர்கோட்டில் இருக்கும்போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனால் பூமியின் ஒரு பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. அப்போது முழு சூரிய கிரகணம் ஏற்படும் நிலை உருவாகும். எந்த கருவியும் இல்லாமல் திறந்த கண்களாலும் பார்க்க முடியும்.


ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்றால் என்ன?


ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்பது பகுதி, முழு மற்றும் வளைய சூரிய கிரகணத்தின் கலவையாகும். இந்த சூரிய கிரகணம் சுமார் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காணப்படுகிறது. இந்த அரிய கிரகணத்தின் போது, ​​சூரியன் சில நொடிகளுக்கு வளையம் போன்ற வடிவத்தை உருவாக்குகிறது, இது நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணங்கள் ஏப்ரல் 19 ஆம் தேதி அமெரிக்காவில் மற்றும் ஏப்ரல் 20 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நிகழ இருக்கிறது. இந்திய நேரப்படி, நாளை காலை 7.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணிக்கு முடிவடைக்கிறது. கிட்டதட்ட இந்த கிரகணம் 5 மணி நேரம் 24 நிமிடங்கள் நீடிக்கிறது. அடுத்த முழு சூரிய கிரகணம் 2172 ஆம் ஆண்டு தோன்றும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.