48MP கேமரா அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனை 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக வாங்க விரும்புகிறீர்களா? ரெட் மீ, ரியல் மீ, போகோ முதலான குறைந்த விலையிலான 5 ஸ்மார்ட்போன் மாடல்கள், உங்களுக்காக இதோ!
Redmi Note 10
ஷாவ்மி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 10 ஸ்மார்ட்மோன் மாடலில் Qualcomm Snapdragon 678 octa-core பிராசஸர், 6.43 இன்ச் Full HD, Super AMOLED அம்சம் கொண்ட டிஸ்ப்ளே, 48 மெகாபிக்சல் ஆற்றல் கொண்ட Sony IMX582 கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை இந்த ஸ்மார்ட்போனைச் சிறந்ததாக மாற்றியுள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் 6GB+128GB என்ற வேரியண்ட், 13,499 ரூபாய் விலைக்கும், 4GB+64GB என்ற வேரியண்ட் 13,999 ரூபாய் விலைக்கும் விற்கப்படுகின்றன.
Realme Narzo 30 Pro 5G
ரியல்மீ நார்சோ 30 ப்ரோ 5G மாடல் போனில் Realme UI ஆபரேடிங் சிஸ்டத்தில் Android 10 இருப்பதோடு, 6.5 இன்ச் Full HD Plus டிஸ்ப்ளே, octa-core MediaTek Dimensity 800U SoC பிராசஸர் ஆகிய சிறப்பம்சங்கள் இருக்கின்றன. மேலும் இந்த மாடலில் 48 மெகாபிக்சல் முன்னணி சென்சார், 8 மெகாபிக்சல் கூடுதல் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. செல்ஃபி எடுப்பதற்கும், வீடியோ கால்கள் செய்வதற்கும் இந்த மாடலில் முன்பக்க கேமரா 16 மெகாபிக்சல்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ரியல்மீ நார்சோ 30 ப்ரோ 5G 6GB+64GB என்ற வேரியண்ட், 16,999 ரூபாய் விலைக்கும், 8GB+128GB என்ற வேரியண்ட் 19,999 ரூபாய் விலைக்கும் விற்கப்படுகின்றன.
Samsung Galaxy M21 2021
சாம்சங் கேலக்ஸி M21 2021 மாடலில் 6.4 இன்ச் அளவுகொண்ட full-HD + Super AMOLED Infinity U டிஸ்ப்ளேவுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. Android 1 மென்பொருளைக் கொண்டு இயங்கும் UI Core, octa-core Exynos 9611 ஆகிய பிராசஸர்களுடன், 48 மெகாபிக்சல் முன்னணி கேமரா, 8 மெகாபிக்சல் கூடுதல் லென்ஸ், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை இந்த மாடலில் கேமராக்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாடல் ஸ்மார்ட்போன், 4GB+64GB என்ற அளவீட்டிற்கு, 12,499 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Realme 8 5G
ரியல்மீ நிறுவனத்தின் வெளியீடான ரியல்மீ 8 5G மாடல் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அளவிலான FullHD+ அம்சம் கொண்ட டிஸ்ப்ளேவையும், MediaTek Dimensity 700 SoC பிராசஸரையும் கொண்டது. இதில் 48 மெகாபிக்சல் Samsung GM1 மாடல் முன்னணி கேமரா, 2 மெகாபிக்சல் மோனோகிரோம் சென்சார், 2 மெகாபிக்சல் கூடுதல் சென்சார் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாடல் ஸ்மார்ட்போனின் 4GB+64GB என்ற வேரியண்ட், 15,499 ரூபாய் விலைக்கும், 4GB+128GB என்ற வேரியண்ட் 16,499 ரூபாய் விலைக்கும், 8GB+128GB என்ற வேரியண்ட் 18,499 ரூபாய் விலைக்கும் விற்கப்படுகின்றன.
Poco X3 Pro
போகோ X3 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனில் Android 11 மென்பொருளால் இயங்கும் MIUI Poco 12 மென்பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது 6.67 இன்ச் அளவிலான full-HD + dot அம்சம் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டது. இதில் octa-core Qualcomm Snapdragon 860 chipset, Adreno 640 GPU ஆகிய பிராசஸர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 48 மெகாபிக்சல் Sony IMX582 கேமரா சென்சாரும், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், இரண்டு 2 மெகாபிக்சல் மைக்ரோ லென்ஸ்கள் ஆகிய சிறப்பம்சங்கள் கொண்ட இந்த மாடலின் 6GB+128GB வேரியண்ட், 16,999 ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது.