வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மணிக்கணக்காக முடங்கியிருந்த சில மணிநேரங்களிலேயே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜியோ மொபைல் நெட்வொர்க் முடங்கியிருந்ததாகப் புகார்கள் வெளிவந்துள்ளன. ஜியோ டவுன் என ட்விட்டரில் நேற்று ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டானதை அடுத்து இந்தப் புகார்கள் கவனத்துக்கு வரத் தொடங்கின. இதையடுத்து ஜியோ நிறுவனமும் நெட்வொர்க் முடங்கியிருந்ததற்கு அதிகாரபூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்தியப்பிரதேசத்திலிருந்து மட்டும் அதிக புகார்கள் பதிவாகி இருந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இந்த செயலிழப்பு நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


முன்னதாக, வாட்ஸ் அப் செயலிழந்ததற்கு பகடி செய்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்கள் முடங்கின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான மெசேஜிங் ஆப்பான வாட்சப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் தற்காலிகமாக முடங்கியதால் பயனர்கள் குழப்பத்திலும், தவிப்பிலும் ஆழ்ந்தனர்.














6 மணிநேரம் கழித்து மீண்டும் இயங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவு செய்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், “மன்னிக்கவும், இந்த சேவைகளை நீங்கள் எவ்வளவு சார்ந்திருக்கிறீர்கள் என தெரியும். இப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்சப் மீண்டும் இயங்கத் தொடங்கியது” என பதிவிட்டிருந்தார்.