குறுஞ்செய்தி அனுப்புதல் , குரல் அழைப்புகளை மேற்க்கொள்ளுதல் , வீடியோ அழைப்புகளை மேற்க்கொள்ளுதல் என ஒருங்கே பல வசதிகளை கொண்ட அப்ளிகேஷன்ஸ் இன்று சந்தையில் ஏராளமாக கொட்டிக்கிடந்தாலும் அதெற்கெல்லாம் முன்னோடி ஸ்கைப்தான். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்கைப் 2003 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. என்னதான் ஸ்கைப் பழமையான செயலியாக இருந்தாலும் இன்று தொழில்நுட்ப சந்தையின் போட்டிக்கு ஏற்ப பல முக்கிய மேம்படுத்தப்பட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி சந்தையில் நிலைத்து நிற்கிறது. ஸ்கைப் சமீபத்தில் தனது புதிய இயங்கு அப்டேட்டான 8.80 வை அறிமுகப்படுத்தியது. வெறும் டெஸ்க்டாப் வெர்சனாக மட்டுமே இருந்த ஸ்கைப் தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திலும் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கைப் தனது புதிய பயனாளார்களுக்கு அழைப்புகளை மேற்க்கொள்வதற்கு சில பாயின்ட்ஸ்களை வழங்கும் அதன் மூலம் , செயலி அல்லாத நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அவர்களில் மொபைல் எண்ணிற்கு மூலம் அழைப்புகளை மேற்க்கொள்ள முடியும். அதே போல ஸ்கைப் சில கட்டண சேவைகளை வழங்குகிறது. அதன் மூலமாக ரீச்சார்ஜ் செய்துக்கொண்டும் மொபைல் எண்களுக்கான அழைப்புகளை ஸ்கைப் மூலம் மேற்க்கொள்ளலாம் . இந்த நிலையில் தற்போது அவசர உதவி எண்ணிற்கான அழைப்பை இலவசமாக ஸ்கைப் மூலம் மேற்க்கொள்ளும் வசதியை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்தவாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி மூலம் பயனாளர்கள் தங்கள் கம்யூட்டர் வெர்சன் ஸ்கைப்பில் இருந்து அவசர அழைப்புகளை மேற்க்கொள்ள முடியும். இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அந்நிறுவனம் அமெரிக்காவின் அவசர உதவி எண்ணானா 911 ஐ தங்கள் கணிணியில் இருந்தே ஸ்கைப் மூலம் அழைக்கலாம் என்றும் , தேவைப்பட்டால் உங்களது இருப்பிட லொக்கேஷனை ஸ்கைப் மூலமே பகிர்ந்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அழைப்பினை மேற்க்கொள்ள கட்டணம் எதுவும் தேவையில்லை என்றாலும் இணைய வசதி முக்கியமானது .
இதே வசதி ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து மற்றும் யுகே ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.. அங்கு இதற்கு கிடைத்த வர்வேற்பை தொடர்ந்து தற்போது அமெரிக்க்காவிலும் இந்த வசதியை அறிமுகம் செய்திருக்கிறது . இந்த வசதியை பெற பயனாளார்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஸ்கைப்பின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம். முன்னதாக ஸ்கைப் தனது குரல் பதிவுகள் அனுப்புதல் வரம்பை நீட்டிருந்தது. முன்பு 2 நிமிடங்கள் வரையில் இருந்த குரல் பதிவு செய்து அனுப்பும் வசதி தற்போது 5 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.