எந்தவொரு வெளிப்புற சக்தி அல்லது பேட்டரியும் இல்லாமல் பயனாளர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க "அதிசய பொருள்wonder material) " என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச்-பாணி அணியக்கூடிய பேண்ட் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எப்படி உருவாக்கப்பட்டுள்ளது ?
இர்வின், கலிபோர்னியா பல்கலைக்கழக குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட இது self-powered device என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அருகில் இருக்கும் மொபைல்போன்களை பயன்படுத்தி பயனாளர்களின் உடல் தகுதியை அறிந்துக்கொள்ள முடியுமாம். இந்த ஸ்மார்ட் வாட்ச் பாணி டிவைஸிற்கு தேவையான ஆற்றலை பேண்டின் நானோ எனர்ஜி ஜெனரேட்டர்களைத் தட்டுவதன் மூலம் உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் சென்சார் சர்க்யூட்ரி மற்றும் எல்இடி டிஸ்ப்ளேவுக்கு மின்சாரத்தை வழங்குகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள near-field communication (NFC) என்னும் தொழில்நுட்பம்தான் இந்த ஸ்மார்ட் பேண்டிற்கும் , மொபைல்போனிற்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியாக இருக்கிறது.பயோ எலக்ட்ரானிக் சென்சார்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நானோ எனர்ஜி :
நானோ எனர்ஜி என்ற அறிவியல் இதழில் இந்த தொழில்நுட்பத்தை விவரிக்கும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில் உடல் வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட ஆரோக்கியத்தின் மற்ற அம்சங்களையும் எப்படியெல்லாம் கண்காணிக்க முடியும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர்களின் கருத்து :
”இந்த கண்டுபிடிப்பு ஒரு தொகுப்பில் பல குறிப்பிடத்தக்க விளைவுகளை அடைகிறது. நீங்கள் ஒரு தொலைதூர இடத்தில் வேலை செய்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் - எங்கும், பாலைவனம், மலைகள் நடைபயணம், அல்லது ஒரு விண்வெளி நிலையம்.. அங்கு தேவைக்கேற்ப உங்கள் உடல்நலத் தகவலைக் கண்காணிக்க வேண்டு, அல்லது உடலின் முக்கிய அறிகுறிகளை அவசரமாகவும் துல்லியமாகவும் கண்காணிக்க வேண்டும் அதற்கு இந்த டிவைஸ் உதவியாக இருக்கும்” என்று எஸ்பாண்ட்யார்-போர் கூறினார்." என்று UCI இல் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலின் உதவி பேராசிரியர் ரஹீம் எஸ்ஃபாண்டியார்-போர் தெரிவித்துள்ளார்.எப்போது வேண்டுமானாலும் பேட்டரி அல்லது சார்ஜிங் உதவியின்றி இயங்கும் இந்த ஸ்மார்ட்பேண்ட் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியாக பார்க்கப்படுகிறது.
MXenes :
மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக ஆராய்ச்சியாளர்கள் பார்ப்பது MXenes எனப்படும் அல்ட்ராதின் 2D பொருளின் பயன்பாடு . இது குறித்து பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தனித்துவமான மின் மற்றும் இயந்திர பண்புகளைக் கொண்டுள்ளது. MXenes (Max-enes என உச்சரிக்கப்படுகிறது) ஆற்றலைச் சேமித்து, தண்ணீரைச் சுத்திகரிக்கும் மற்றும் பாக்டீரியாவைத் தடுக்கும். இதைத்தான் இந்த ஸ்மார்ட் பேண்டில் ஆற்றலுக்காக பயன்படுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது. வளைக்கக்கூடிய மற்றும் நீட்டக்கூடிய பொருள் அச்சிடப்பட்டு, ட்ரைபோஎலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர்களை (TENGs) இதன் மூலம் உருவாக்க முடியும், அவை தட்டுவதன் மூலம் அல்லது அழுத்துவதன் மூலம் மின்னழுத்தத்தை உருவாக்கும் திறன் கொண்டவை.