இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வழங்கி வருகிறது.  இதோடு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக பல்வேறு ஸ்கீம்களையும் அந்த வங்கி அறிமுகம் செய்கிறது. இது ஒருபுறம் இருக்க இருந்த இடத்தில் இருந்து பணத்தை திருடும் ஆன்லைன் கொள்ளையில் இருந்து பாதுகாக்க எஸ்பிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது எஸ்பிஐ. அந்த வகையில் சமீபத்தில் சில முக்கிய விஷயங்களை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ தெரிவித்துள்ளது.


ஓடிபி:


எஸ்பிஐ ஏடிஎம்களில் ஏற்படும் மோசடிகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான். ஓடிபி. ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமானால் வங்கியில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு 4 இலக்கம் கொண்ட ஓடிபி வரும். அந்த எண்ணை ஏடிஎம்மில் பதிவு செய்தால்மட்டுமே ரூ.10ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்க முடியும். ஆனால் செல்போன் கையில் இல்லை, சரியான நேரத்துக்கு ஓடிபி வருவதில்லை போன்ற காரணங்களை கூறும் வாடிக்கையாளர்கள். 






ரூ.9900 போன்ற ரொக்கத்தை ஓடிபி இல்லாமல் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் வங்கி நினைத்த பாதுகாப்பை கொடுக்க முடியவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து குறிப்பிட்டுள்ள எஸ்பிஐ ஓடிபி பிரச்னையை நாங்கள் சரி செய்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி ஏடிஎம்மை பயன்படுத்தாமல் அதிக தொகையை ஓடிபி முறைப்படியே எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. 


பான்கார்ட்...


உங்கள் செல்போனுக்கு வங்கி பெயரில் வரும் அனைத்து மெசேஜ்களையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பக்கூடாது என தெளிவாக கூறியுள்ளது எஸ்பிஐ. உங்களது பான்கார்ட் எண்ணை உடனடியாக கொடுக்கவில்லை என்றால் அக்கவுண்ட்  லாக் ஆகும், இண்டர்நெட் பேங்கிங் தடையாகும் போன்ற மோசடி மெசேஜ்கள் உங்களது எண்ணுக்கு வந்தால் அதனை எக்காரணத்தைக் கொண்டும் க்ளிக் செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளது எஸ்பிஐ. அப்படி எஸ் எம் எஸ் மூலம் வங்கியில் இருந்து எந்த தகவலையும் கேட்பதில்லை என வங்கி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.






அது போல ஏதேனும் அழைப்பு வந்தாலோ தகவல்களையும் எதையும் செல்போன் மூலம் கொடுக்கக் கூடாது என்றும், எந்த சந்தேகம் என்றாலும் நேரடியாக வங்கியை அணுகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதுபோல மோசடிக்காரர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்ற வீடியோவையும் எஸ்பிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.