சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சிறுசேரி எல்என்டி ஈடன் பார்க் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஹேமா கல்யாணசுந்தரம். இவர் பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ் ( PFA) என்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அதே பகுதியில் சுற்றித் திரிந்து வந்த பெண் நாய் ஒன்றை, குட்டிகளிடம் இருந்து பிரித்து சட்டவிரோதமாக இடம் மாற்றம் செய்துள்ளனர்.  தெருநாய் மர்ம நபர்கள் சிலர் கடத்தி செல்லும் ஆதாரம் எங்களிடம் உள்ளது இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் நாங்கள் கேட்ட பொழுது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நாயை தத்து எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.


மாவட்ட ஆட்சியர் கொடுத்த ஆணையை தவறாக பயன்படுத்தி உள்ளனர். தாய் நாயே கடத்திச் சென்றுள்ளதாக தற்பொழுது அது எங்கே இருக்கிறது என்ற தகவலை கூட யார் சொல்ல மறுக்கிறார்கள் காவல்துறை உடனடியாக அந்த நாய் எங்க இருக்கிறது என்ற தகவலை விசாரித்து தரவேண்டும் என தெரிவித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தற்போது இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.



இதுகுறித்து புகார் அளித்த ஹேமாவிடம் கேட்டபொழுது, குட்டி போட்டு பால் கொடுத்துக் கொண்டிருந்த நாயை திட்டமிட்டு தூக்கி சென்றுள்ளனர். தாய் நாய் தூக்கி சென்றதால் நாய்க்குட்டிகள் எங்கே போனது என்று கூட தெரியவில்லை. நம்மை போல நாய் குட்டிகளும் உயிர் தானே, நாயை தூக்கிச் சென்றவர்கள் தத்து கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள் தத்து கொடுத்த நாய் எங்கே இருக்கிறது என சொல்ல மறுக்கிறார்கள். தத்து எடுத்துச் செல்பவர்கள் நாயை கூண்டில் அடைத்து கொடூரமாக எடுத்துச் செல்வார்கள் . அடிக்கடி இந்த பகுதியில் இவ்வாறுதான் நாய்கள் காணாமல் போகிறது இது குறித்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.




இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நாய் காணாமல் போனது தொடர்பாக புகார் வந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர