கொரோனா பெருந்தொற்றூ காரணமாக எங்களில் பலர் தங்கள் பணியிடங்களைப் பார்த்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இது உலகையே ஸ்தம்பிக்கச் செய்த அதே வேளையில் வீட்டிலிருந்தே வேலை செய்வது எப்படி என்பதை இந்தத் தொற்றுநோய் பலருக்கு அறிமுகப்படுத்தியது.  அழகாக துண்டுகளாக்கப்பட்ட ரொட்டி கிடைப்பது எப்படியான ஆசீர்வாதமோ அது போல இந்த வீட்டிலிருந்தே வேலை செய்வது பலருக்கு அமைந்தது. ஆனால் சிலருக்கு இது நேர் எதிரியாக அமைந்தது. 


மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களிடையே இதுகுறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. வொர்க் ட்ரெண்ட் இண்டெக்ஸ் என்கிற அந்த ஆய்வை அண்மையில் வெளியிட்டது. எதுமாதிரியான வேலைமுறை எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்கும் என்பது வரையில் இந்த சர்வே மூலம் கணிக்கப்பட்டுள்ளது. 







ஆய்வில், முன்பு அலுவலகத்துக்கு கார் பேருந்து எனப் பயணம் செய்தவர்கள் தற்போது அந்த நேரத்திலும் அலுவலகத்துக்காக வேலை செய்தார்கள். வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் கூடுதல் நேரம் கூட உழைத்தார்கள். சிலர் வேலை நேரம் முடிந்தும் கூடத் தொடர்ச்சியாக அலுவலக மெயில்களுக்கு பதில் தட்டிக் கொண்டிருப்பார்கள். வீட்டிலேயே அலுவலகத்தைக் கொண்டுவந்ததால் அதுவே சிலருக்கு உளவியல் ரீதியாக அழுத்தத்தைக் கொடுத்ததக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.






மைக்ரோசாப்ட் தலைவரான சத்யா நாதெல்லா அண்மையில் ஆய்வு குறித்துப் பகிர்ந்து இப்படியான கருத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். தனக்கு அலுவலக மெயில்களுக்கு பதில் அளிப்பது எப்படியான அழுத்தத்தைத் தந்தது எனப் பகிர்ந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார். இப்படியான போக்கால் ஊழியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.