வரும் ஆகஸ்ட் 25 அன்று, சாம்சங் கேலக்ஸி M32 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த ஜுன் மாதம் இதே ஸ்மார்ட்போன் வகையின் 4G மாடல் வெளியிடப்பட்டது. அதில் 6000mAh பேட்டரி இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போதைய 5G மாடலில் 5000mAh இடம்பெறப் போவதாக இந்த ஸ்மார்ட்போனுக்கு உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக அமேசான் இந்தியா வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் quad rear camera setup உடன், செல்ஃபி கேமராவுக்காக notch வசதியும் இடம்பெற்றிருக்கிறது. 


கடந்த ஏப்ரல் மாதத்தில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M42 வகையில், 5G மாடல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது அதே 5G வரிசையில் சாம்சங் கேலக்ஸி M32 5G ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 25 அன்று மதியம் 12 மணி முதல், அமேசான் இந்தியா தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இதனைப் பற்றிய விவரங்கள் அதன் பிரத்யேக அமேசான் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அமேசான் தளத்தில் இருந்து வாங்கும் போது, இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கும் எனவும், ரீடெய்ல் கடைகளில் விற்பனை தொடங்கும் போது, இன்னும் பல்வேறு நிறங்களில் கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.



சாம்சங் கேலக்ஸி M32 5G ஸ்மார்ட்போனில் 6.5-inch HD+ Infinity V டிஸ்ப்ளேவுடன் MediaTek Dimensity 720 SoC பொறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்பக்கம் இருக்கும் கேமராவில் 48 megapixel சென்சார் இருக்கிறது. செல்ஃபி கேமராவில் 13 MP கேம்ராவும், 5000mAh பேட்டரியும், இந்த டிவைஸினுள்  Samsung's Knox securityயும் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு OS அப்டேட்டுகளும், 12 5G பேண்ட்களை சப்போர்ட் செய்யும் டிவைசாகவும் இது இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.


கடந்த மாதம் வெளியான தகவல்களின் படி, Galaxy M32 5G ஸ்மார்ட்போனில் 6GB RAM இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், MediaTek Dimensity 720 SoC என்பதும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் 6GB RAM வசதி இருக்கும் என்பதை கேட்ஜெட் ப்ரியர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஜனவரி மாதம், ஐரோப்பாவில் வெளியான Samsung Galaxy A32 5G ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் புதிய பெயரில் வெளியிடப்படுவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 



இதற்குக் காரணம், ஐரோப்பாவில் வெளியான சாம்சங் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான வசதிகள் இதிலும் இடம்பெற்றிருக்கின்றன. ஐரோப்பில் வெளியான Galaxy A32 5G இங்கு பெயர் மாற்றம் செய்து வெளியிடப்படும் என்றால், அதன் சிறப்புவாய்ந்த கேமரா வசதியும், வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் தற்போது வெளியாகும் ஸ்மார்ட்போனிலும் இடம்பெறலாம். 


இதன் விலை 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.