ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் க்ளாஸா ஒரு மொபைல் பேரு சொல்லுங்கன்னு யாராவது கேட்டா, அதுக்கு பலரும் பரிந்துரைக்குற மொபைல்போன் "சாம்சங்"கா இருக்கும். சாம்சங் எப்போதுமே புதிய தொழில்நுட்ப முறைய கையாளக்கூடியவங்க. அந்த விஷயங்களை ஃபாலோ செய்வதற்காகவே ஒரு தனிக்கூட்டம் இருக்குறாங்க. சாம்சங் நிறுவனத்தை பொறுத்தவரையில் தான் தயாரிக்கும் மொபைல்ஃபோன்களின் தரத்தை ஐபோன் மொபைல்போன்களோடு ஒப்பிட்டு வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அடுத்ததாக களம் இறங்க இருக்கக்கூடிய மொபைல்போன் "சாம்சங் கேலக்ஸி F52 5G"
இந்த மொபைல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் , மொபைல் குறித்த சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சைனாவின் மைக்ரோப்லாகிங் இணையத்தில் இந்த மொபைலின் படம் மற்றும் விலை வெளியாகியுள்ளது. சீனாவில் சாம்சங் கேலக்ஸி F52 5Gமொபைல் CNY 1,999 வந்துள்ளதாக தெரிகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ 22,900 . கிட்டத்தட்ட இந்த மதிப்பீட்டிலேயே இந்தியாவிலும் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி F52 5G பார்ப்பதற்கு சாம்சங் கேலக்ஸி எ90 ஐ போன்ற தோற்றம் கொண்டுள்ளது. 4 கேமரா அமைப்புக்கொண்ட ரியர் கேமாரா வசதியும் , செல்ஃபி கேமராவை பொறுத்தவரையில் பஞ்ச் ஹோல் டிஸ்பேலே வசதியும் கொண்டுள்ளது. அதேபோல மொபைலின் கீழ் பக்கத்தில் 3.5mm அளவிலான ஹெட்போன் ஜாக், Type-C USB கேபிளுக்கான போர்ட் வசதி, மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றையும் வெளியான புகைப்படம் மூலம் பார்க்க முடிகிறது. சாம்சங் கேலக்ஸி F52 5G -இல் எதிர்பார்க்கப்படும் வசதிகள் என்ன?
சாம்சங் கேலக்ஸி F52 5G ஆனது ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்தை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6.5 இஞ்ச் அளவிலான HD மற்றும் 1,080x2,408 பிக்சல்ஸ் திறன் கொண்ட TFT திரையோடு உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. 4,500mAh திறனுடன் கூட பேட்டரி வசதி மற்றும் 25 வாட்ஸ் திறனுள்ள விரைவு சார்ஜிங் வசதியுடன் வெளியாகலாம்.