மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Samsung நிறுவனத்தின் இரண்டு பிசினஸ் லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது. Samsung கேலக்ஸி புக் பிசினஸ் எடிஷன்(Samsung Galaxy Book Business Edition) மற்றும் சாம்சங் கேலக்ஸி புக் ப்ரோ பிசினஸ் எடிஷன் ( Samsung Galaxy Book Pro Business Edition ) என இரண்டு வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப்ஸ் தொழிலதிபர்களை கவரும் நோக்கில், Apple நிறுவனத்தின் மேக் லேப்டாப்பிற்கு போட்டியாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர்ஸ், ஐடி மேம்பாடு மற்றும் கொலாபிரேஷன் டூல்ஸ் போன்ற பல வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் Samsung கேலக்ஸி புக் பிசினஸ் எடிஷன்(Samsung Galaxy Book Business Edition) மற்றும் சாம்சங் கேலக்ஸி புக் ப்ரோ பிசினஸ் எடிஷன் ( Samsung Galaxy Book Pro Business Edition ) என இரண்டுமே இண்டெல்லின் 11 வது தலைமுறையின் கீழ் இயங்குகின்றனர். இவை இண்டெல் ஈகோ சான்று பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி புக் பிசினஸ் எடிஷன்(Samsung Galaxy Book Business Edition)
அமெரிக்காவில் இந்த லேப்டாப் $ 899 டாலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 66,100 ரூபாயாகும். 15.60 இன்ச் திரையோடு 1920x1080 பிக்சல் திரை ரெசலியூசனுடன் அறிமுகமாகியுள்ளது. மேலும் 4 ஜிபி ரேம் , Core i3 புராஸசர் வசதிகளுடன் , விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் அறிமுகமாகியுள்ளது. மேலும் Windows 11-க்கான புதுப்பித்தலும் கொடுக்கப்பட்டுள்ளது. Intel Iris Xe graphics2 கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் வசதியுடன் 256ஜிபி அளவிலான NVMe SSD சேமிப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி புக் ப்ரோ பிசினஸ் எடிஷன் (Samsung Galaxy Book Pro Business Edition )
இது 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் வேரியண்டில் கிடைக்கிறது. இதில் 13.3 இன்ச் $1,099 டாலருக்கும் (இந்திய மதிப்பில் 80,800) 15.6 இன்ச் லேப்டாப்பானது $1,199 அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் தோராயமாக 88,100 ரூ). விற்பனை செய்யப்படுகிறது.AMOLED டிஸ்ப்ளே வசதிகளுடன் 1920x1080 திரை ரெசலியூசன் , Core i3 புராஸசர் வசதிகளுடனும் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் மூலமும் இயங்குகிறது. இதில் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் மற்றும் அதிகபட்சம் 8GB ரேம் மற்றும் 512GB வரை NVMe SSD வசதியையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு வேரியண்டும் மிஸ்டிக் ப்ளூ மற்றும் மிஸ்டிக் சில்வர் என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன.