சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் ரெண்டர் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் பிரஸ் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. சாம்சங்க் கேலக்ஸி எஸ் 21 சீரிஸில் அடுத்ததாக கேலக்ஸி எஸ் 21 எப்இ மாடலை சாம்சங்க் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடலுக்கான வெளியீட்டு தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இதுவரை பலமுறை அறிமுகப்படுத்தும் தேதிகள் வெளியாகி, அனைத்தும் வதந்திகளாக மாறிவிட்டன. ஆனால், சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எப்இ -யின் அறிமுகம் இந்தமுறை தவறாது என டெக் உலகினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இது ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்து வருகிறது. இப்போ வருகிறது, அப்போது வருகிறது என முரண்பட்ட தகவல்கள் சாம்சங்க் கேலக்ஸி எஸ் 21 எப்இ மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன எனலாம். அதனாலேயே அது குறித்த தகவல்கள் அதிகம் தேடப்படுவதால், அடிக்கடி லீக் ஆகின்றது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் மற்றும் அம்சங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இம்முறை வெளியாகி இருக்கும் ரெண்டரில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட 20 கிராம் எடை குறைவாகவும், மெல்லியதாகவும் இருக்கிறது. இந்த மாடலில் 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 6ஜி.பி./128 ஜி.பி. மற்றும் 8ஜி.பி./256ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யு.ஐ. 3.1 ஓ.எஸ்., 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
சாம்சங்க் கேலக்ஸி எஸ் 21 எப்இ மாடல் அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை SamMobile வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அமெரிக்காவில் நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் (CES) நடைபெறுகிறது. லாஸ்வேகாஸ் நெவாடாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சாம்சங்க் கேலக்ஸி எஸ் 21 எப்இ அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. உலகளாவிய டெக் சந்தையில் ஏற்பட்டுள்ள சிப் தட்டுப்பாடு கேலக்ஸி எஸ்21 எப்இ மாடல் தாமத்திற்கு முக்கிய காரணம். இந்த தட்டுப்பாட்டால் கேலக்ஸி எஸ் 22 சீரிஸை அறிமுகப்படுத்தும் அந்நிறுவனத்தின் திட்டமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. மற்ற சில தகவல்களின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எப்இ ஜனவரி வரை அறிமுகப்படுத்த சாத்தியமில்லை என கூறுகின்றன. பிப்ரவரியில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அந்த தகவல்கள் கூறுகின்றன.