தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களுக்கு 28 வரையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தன. ஆனால் 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என TRAI அறிவுறுத்தியதை அடுத்து ஜியோ தனது பயனாளர்களுக்கான 30 நாட்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் பிரபல ஏர்டெல் நிறுவனமும் தனது பயனாளர்களுக்கு இந்தியாவில் ரூ.296, ரூ.319 மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ.296 திட்டத்தின் கீழ் , இலவச அழைப்பு மற்றும் டேட்டா உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும் . குறைந்தபட்சம் ஒரு 30 நாள் திட்டத்தையாவது வழங்க வேண்டும் என்ற TRAI இன் சமீபத்திய உத்தரவுக்கு ஏர்டெல் கட்டுப்பட்டிருக்கிறது. ரூ.296 திட்டமானது மொத்தம் 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அந்த டேட்டா ஒதுக்கீட்டை முடித்தவுடன் டேட்டா கட்டணத்திற்கு 50p/MB கட்டணம் மெயில் பேலன்ஸில் இருந்து வசூலிக்கப்படும். கொடுக்கப்பட்ட டேட்டாவ 30 நாட்கள் செல்லுபடியாகும். கூடுதல் டேட்டாவிற்கு ஆட் ஆனை இணைத்துக்கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட பேக் மூலம் வரம்பற்ற குரல் அழைப்பை பெற முடியும்.மேலும் பயனர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறும் வசதி உள்ளது.
இது தவிர 30 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ சேவைகளின் ட்ரைல் பீரியடை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம். இருப்பினும், பயனருக்கு ஒரு முறை மட்டுமே இந்த பலன் கிடைக்கும். பயனர்கள் Apollo 24/7 Circle நன்மைகளை 3 மாதங்களுக்கு கூடுதல் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். அதே போல ஷா அகாடமியுடன் 1 வருட இலவச படிப்புகளுக்கு பயனாளர்கள் தகுதி பெறும் வாய்ப்பும் கொடுக்கிறது ஏர்டெல். ஏர்டெல்லின் இந்த புதிய திட்டம் மூலம் ஃபாஸ்டாக்கில் பயனர்கள் ரூ.100 ஐ கேஷ்பேக் பெறுவார்கள். அதே போல Wynk இசைக்கான அணுகலையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
ஜியோ அறிமுகப்படுத்திய அதே விலையில்தான் ஏர்டெல்லும் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகிறது. வசதிகளை பொருத்தவரையில் ஜியோ திட்டம் ரூ.296 ஆனது 30 நாட்கள் செல்லுபடியாகும். இது 25ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. டேட்டா வரம்பு தீர்ந்தவுடன், சந்தாதாரர் 64kbps வேகத்தில் இணையத்தைப் பெறுவார்கள்.
இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. சந்தாக்களின் அடிப்படையில், நிறுவனம் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிலிருந்து சேவைகளை வழங்குகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சேவைகளை வழங்கினாலும் கூட . ஜியோ டேட்டா தீர்ந்த பிறகு மெயின் அக்கவுண்டில் இருக்கும் ரூபாயை டேட்டாவிற்காக எடுத்துக்கொள்வதில்லை. மாறாக வேகத்தை குறைக்கிறது. ஆனால் ஏர்டெல் நிமிடத்திற்கு 50 பைசாவை வசூல் செய்கிறது.