இணைய இணைப்புகளில் (Internet Hubs)மிகப்பெரிய நாடாக விளங்கும் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுன் மாலத்தீவுகளை இணைக்கும்  கடல்வழி கேபிள் தொடர்பு வசதி (Undersea Cable System) விரைவில் தொடங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பான, திட்ட ஒப்பந்தத்தில் மாலத்தீவின் Ocean Connect Maldives என்ற அரசு அமைப்புடன் ஜயோ ரிலையன்ஸ் நிறுவனம் இன்று கையெழுத்திட்டது.






இந்தியாவை மையமாக வைத்து உலகின் பிரதான பகுதிகளை  இணைக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடல்வழி கேபிள் தொடர்பு வசதி வசதியை மேற்கொண்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய கடல்வழி கேபிள் உற்பத்தியாளராக விளங்கும் SubCom என்ற நிறுவனத்துடன் இணைத்து IAX, IES என்ற இரண்டு மிகப்பெரிய திட்டத்தை முன்னதாக அறிவித்தது


Multi-Terabit India-Asia-Xpress (IAX) என்று சொல்லப்படும் அடுத்த தலைமுறைக்கான கடல்வழி கேபிள் தொடர்பு சேவை மும்பையிலிருந்து தொடங்கி சிங்கப்பூருடன் இணைக்கப்படுகிறது. சென்னை,மலேசியா, தாய்லாந்து என முக்கிய தொடர்புகளில் இதற்கான சேவை இருக்கும். தற்போது, மாலத்தீவுகளில் உள்ள Hulhumale பகுதி நேரடியாக இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன், மூலம் வலுவான, அதிவிரைவு இணைய இணைப்பு வசதிகள் இந்தத் தீவுகளில் கிடைக்கப்பெறும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.   


IAX கடல்வழி கேபிள் திட்டத்தின் மூலம்,16,000 கிலோமீட்டர் நீளத்துக்கு தற்போது இருப்பதை விட நூறு மடங்கு அளவிற்கு (200 TBPS capacity, 100 GB) அதிகவேக இணைய வசதியிருக்கும்  என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் கிழக்கு ஆசியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இணைய வாய்ப்புகளை ஏற்படுத்து தருவது இதன் நோக்கமாகும்.  


India-Europe-Xpress என்றழைக்கப்படும் மற்றோரு சேவை மும்பையிலிருந்து தொடங்கி தெற்கு இத்தாலியில்உள்ள மிலன் நகருடன் இணைக்கப்படுகிறது. இதில், மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு ஆப்ரிக்கா, மத்திய தரைக்கடல் எல்லையில் உள்ள நாடுகள்  (Meditertean) போன்ற முக்கியத் தொடர்புகளில் இதன் சேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் மேத்யூ உம்மன் இதுகுறித்து கூறுகையில், மேம்படுத்தப்பட்ட பேண்ட்வித் வசதிகள், இணைய வழி வர்த்தகம், அறிவுப் பகிர்வு உள்ளிட்டவையே இன்றைய உலகப் பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்கின்றன.மாலத்தீவு அரசு முன்னேடுக்க இருக்கும் கணினி வழி நிர்வாகச் சேவைக்கு இந்த திட்டம் அதிகப்பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தார். 






இந்த முயற்சி மாலத்தீவின் டிஜிட்டல் மய உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். இதன்மூலம் அனைவருக்கும்  சமவாய்ப்பு உருவாகும்.  தீவுகளில் வேலைவாய்ப்பு பெருகும். பொருளாதாரம் முன்னேற்றமடையும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்" என்று மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.