Jio 5G : ஜியோ நெட்வொர்க்கின் 5G ஸ்பீட் குறித்து நடத்தப்பட்ட சோதனையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இது வரை இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் வழங்கிடாத நெட்வொர்க் ஸ்பீடில் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இந்தியாவில் இந்த மாதம் அதாவது 2022ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் 5G சேவையை இந்தியப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில்  சோதனை அடிப்படையிலான 5ஜி சேவை தொடங்கவுள்ளதாவும், மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் மேலும், 5ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்றும்,  ஏனெனில் இந்த சேவை தானாகவே Jio True 5G க்கு மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

அதன் அடிப்படையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில்  Jio 5G Download Speed என்பது ஒரு நொடிக்கு ஒரு Gbக்கும் மேலாக உள்ளதாக ரிலயன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரிலையன்ஸ் ஜியோ வியாழன் அன்று மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய மூன்று நகரங்களில் 5G சேவைகளின் பீட்டா சோதனைகளைத் தொடங்கியது. அப்போது  பயனர்கள் 1Gbps க்கும் அதிகமான பதிவிறக்க வேகத்தைப் பெறுவதாகவும்,  புது தில்லியின் லுடியன்ஸ் மண்டலத்தில் உள்ள சாணக்யபுரியில், பயனர்கள் 1Gbps-க்கும் அதிகமான இணைய வேகத்தைப் பெற்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

மேலும் இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் கூறியதாவது, படிப்படியாக மக்கள் முழு நகரத்திலும் 5G சிக்னல்களைப் பெறத் தொடங்குவார்கள். Jio தனித்த 5G தொழில்நுட்பம் 'True 5G' என முத்திரை குத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 'ஜியோ வெல்கம் ஆஃபர்' பயனர்கள் தற்போதுள்ள ஜியோ சிம் அல்லது 5ஜி கைபேசியை மாற்றத் தேவையில்லாமல் தானாகவே ஜியோ ட்ரூ 5ஜி சேவைக்கு மேம்படுத்தப்படுவார்கள். Jio ட்ரூ 5G சேவைகளுடன் தங்களுடைய 5G கைபேசிகள் தடையின்றி வேலை செய்ய அனைத்து கைபேசி பிராண்டுகளுடனும் Jio இணைந்து செயல்படுகிறது, இதனால் வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்யக்கூடிய 5G சாதனங்களின் விரிவான வரம்பைப் பெறலாம்.  டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ் எனும் பயனர் கூறுகையில், தொற்றுநோய் காலத்தில் நிறைய பயனர்கள், வணிகம் மற்றும் மாணவர்கள் இணையதளத்தில் சேர்க்கப்பட்டனர் எனறார். மேலும் 5G சேவைகள் அத்தகைய நபர்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும் என்றும் அவர் கூறினார்.