ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ப்ரீபெய்டு ப்ளான்கள் பலவற்றை அறிவித்துள்ளது. ரூ.899 மற்றும் ரூ.395க்கு இரண்டு சிறந்த திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.


இது  மொத்தம் 336 நாள்கள் செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தின் விலை ரூ.899 மட்டுமே. அதேபோல் 84 நாள்கள் வேலிடிட்டி கிடைக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. அது, ரூ.395 மதிப்புள்ளது. இந்த இரு திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளை குறித்து விரிவாகப் பார்ப்போம்.


ஜியோ ரூ.899 திட்டம்: என்ன சிறப்பு?


ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.899 திட்டம் பயனர்களுக்கு வழங்கும் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி பீரியட் மொத்த 336 நாள்களாகும். இதில் மாதந்தோறும் 2 ஜிபி டேட்டா பயனர்களுக்குக் கிடைக்கிறது. இந்த டேட்டாவானது ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும்.


மேலும், இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்து கொண்டால், நாடு முழுவதும் உள்ள அனைத்து செல்போன் நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமடட் வாய்ஸ் கால் செய்யலாம். மாதத்திற்கு 50 எஸ்எம்எஸ் போன்ற சேவையைப் பெறலாம். அதாவது இந்தத் திட்டத்தில் மொத்தம் 24 ஜிபி டேட்டா முழு காலத்திற்கும் வழங்கப்படுகிறது.


ரூ.899 ரீசார்ஜில் கூடுதல் சலுகையாக ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற ஜியோ இணைப்பு சார்ந்த பயன்பாடுகளை இலவசமாகப் பெற முடியும். இந்த ஆஃபர் உங்களுக்குப் பிடித்திருந்தால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பிற மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம்  ரீசார்ஜ் செய்யலாம்.


ஜியோ ரூ.395 திட்டம்: என்ன ஸ்பெஷல்?


ரூ.899 திட்டத்தில் 300 நாட்களுக்கும் மேல் வேலிடிட்டி இருப்பதால் அடிக்கடி ரீசார்ஜ் செய்யவேண்டாம் என்பதே அதன் சிறப்பாக உள்ளது. அதேபோல், ரூ.395  ரீசார்ஜ் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் 84 நாள்களுக்கு வேலிடிட்டி பீரியட் பெறலாம். மேலும், இந்த திட்டம் முழு காலத்திற்கும் 6 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்தத் தரவு தீர்ந்தவுடன், நீங்கள் 64 kbps வேகத்தில் இணையத்தை அணுகலாம்.


மேலும், இந்த திட்டத்திலும் அன்லிமடட் வாய்ஸ் கால் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் மொத்தம் 1000 எஸ்எம்எஸ்-களை அனுப்ப அனுமதிக்கிறது. திட்டத்தில் நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற பயன்பாடுகளுக்கான இலவச அணுகலைப் பெற இயலும்.


இந்த இரண்டு திட்டங்களும் அதிக நாட்கள் வேலிடிட்டியை வழங்குவதால், அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழல் இருக்காது. இதுவே, டெலிகாம் ஆபரேட்டர்கள் வழங்கும் அதிக நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களில், மிகவும் மலிவானது எனக் கூறப்படுகிறது.