நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து படம் குறித்தான ட்ரோல்களும், மீம்களும் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.


இந்நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோ எனப்படும் பிடிஎஸ் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில், பீஸ்ட் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை சேர்த்து ஒரே வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.


வீடியோவைக் காண:






இந்நிலையில், பீஸ்ட் பார்ட் - 2 வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இயக்குனர் நெல்சர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், வாய்ப்பு இருந்தால், பீஸ்ட் பார்ட் 2 வெளியாகும் எனவும், அதற்கான அனைத்து அம்சங்களையும் அந்த கதைக்களம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 


இந்த சஸ்பென்ஸ் அடங்குவதற்குள், நெல்சன் அடுத்ததாக இயக்க இருந்த ரஜினியுடனான ‘தலைவர் 169’ படத்தில் இருந்து  அவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு முற்றுப்புள்ளி விதமாக, இயக்குநர் நெல்சன் தலைவர் 169 படத்தை தானே இயக்குகிறேன் என்பதை குறிக்கும் வகையில் ட்விட்டரில்  ‘தலைவர் 169’  என்ற பெயரை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண