சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 8 2021 ஸ்மார்ட் போனை விரைவில் உலக அளவில் வெளியிடவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம். சியோமி நிறுவனம் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இதே ரெட்மி நோட் 8 ஸ்மார்ட் போனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான ரெட்மி நோட் 8 கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் வெளியான அந்த போன் 6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக இருந்தது. அதேசமயம் ஆண்ட்ராய்டு 9.0 தளத்தில் குவால்காம் மற்றும் ஸ்னாப் ட்ராகன் சிப்செட் கொண்டு வெளியானது. 






48 மேகபிக்சல் மெயின் கேமரா, 13 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் 4000mAh பேட்டரி கொண்ட அந்த ஸ்மார்ட் போன் 12,500 ரூபாய்க்கு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியாகவுள்ள இந்த புதிய 2021 ரெட்மி நோட் 8 ஸ்மார்ட் போன் அதை விட கூடுதல் விலைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 8 2021ன் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்ற போதும் மீண்டும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனை பயனாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று இணையத்தில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றது. 




2019ம் ஆண்டு வெளியான ரெட்மி நோட் 8 போன்கள் இதுவரை சுமார் 25 கோடி யூனிட்கள் என்ற அளவில் விற்பனையான நிலையில் அதன் அடுத்த வெர்சனை அந்நிறுவனம் வெளியிடவுள்ளது. விரைவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்றும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக சியோமி நிறுவனம் தனது பல பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ரூ.20 ஆயிரத்துக்குள் அசர வைக்கும் கேமரா, சார்ஜிங், பேட்டரி போன்ற சிறப்பம்சங்களுடன்  பல போன் மாடல்களை ரெட்மி களமிறக்கியுள்ளது. அந்த வரிசையில் கடந்த மே 13ம் தேதி சியோமி தனது Redmi Note 10S மாடல் மட்டுமின்றி ரெட்மி ஸ்மார்ட் வாட்சையும் ரிலீஸ் செய்துள்ளது. இந்தியாவில் தற்போது வெளியானாலும்  Redmi Note 10S மாடல் போன் கடந்த மார்ச் மாதமே சீனாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச்சும் நவம்பரில் வெளியானது.   


ரெட்மியின் ஸ்மார்ட்வாட்சை பொருத்தவரை விலை ரூ.3,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாட்ச் மூன்று வண்ணங்களிலும், வார் பகுதி 4 வண்ணங்களிலும் கிடைக்கும்.Android, iOS சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட் வாட்ச் இருபாலினரும் அணியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.






எந்த இக்கட்டான காலகட்டமாக இருந்தாலும் மொபைல் போன் விரும்புவோர், அவற்றை வாங்குவதை தவிர்ப்பதே இல்லை. கொரோனா ஊரடங்கு காலகட்டமாக இருந்தாலும் ரெட்மி அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் போன்கள் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எண்ணத்தில் தான் நெருக்கடியான காலகட்டத்திலும் துணிந்து ரெட்மி தனது படைப்புகளை களமிறக்குகிறது. பலர் இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தும் வருகின்றனர்.