வரும் பிப்ரவரி 9 அன்று, ரெட்மீ நிறுவனம் சார்பில் Redmi Note 11, Redmi Note 11S ஆகிய இரண்டு மாடல்களும் இந்தியாவில் வெளியிடப்படவுள்ளன. கடந்த வாரம், ரெட்மீ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், Redmi Note 11S மாடல் வெளியிடும் நாளாக பிப்ரவரி 9 தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ரெட்மீ நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் Redmi Note 11 மாடலும் அதே நாளில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. 


சீனாவைச் சேர்ந்த ரெட்மீ நிறுவனம் சமீபத்தில் ரெட்மீ நோட் 11 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டது. இந்த சீரிஸில் Redmi Note 11S, Redmi Note 11 Pro 4G, Redmi Note 11 Pro 5G ஆகிய மாடல்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 


இந்த மூன்று ஸ்மார்ட்ஃபோன் மாடல்களும் சர்வதேச அளவில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. தற்போது, இந்தியாவில் இந்த மாடல் வெளியாவதற்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், சமீபத்தில் Redmi Note 11, Redmi Note 11S ஆகிய மாடல்களின் விலை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. 



Redmi Note 11


 


சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், Redmi Note 11 மாடலின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலின் விலை 13,999 ரூபாய் அல்லது 14,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 


Redmi Note 11S மாடலின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் விலை 16,999 ரூபாய் அல்லது 17,999 ரூபாய் என நிர்ணயிக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் இந்த ஸ்மார்ட்ஃபோன்களின் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்படும். இதனை ரெட்மீ நிறுவனத்தின் யூட்யூப் பக்கத்திலும், பிற சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பார்வையிடலாம். 


மேலும், ரெட்மீ நிறுவனம் சர்வதேச அளவிலான Redmi Note 11S மாடல் இந்தியாவிலும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. சர்வதேச அளவிலான மாடலில் உள்ள அதே அம்சங்கள் இந்தியாவில் வெளியாகும் மாடலிலும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 



Redmi Note 11S


 


Redmi Note 11S மாடலில் 90hz screen refresh rate, 108 மெகாபிக்ஸல் முன்னணி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், மேக்ரோ லென்ஸ், 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா, MediaTek Helio G96 பிராசசர், 8GB RAM, 128GB ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி, 33W விரைவாக சார்ஜிங் செய்யும் சிறப்பம்சம் முதலானவை இந்த மாடலில் இடம்பெற்றுள்ளன. 


மறுபக்கம், Redmi Note 11 மாடலில் Qualcomm Snapdragon 680 SoC பிராசஸர், 6GB RAM, 128GB ஸ்டோரேஜ் வசதி, 6.43 இன்ச் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, 50 மெகாபிக்ஸல் முன்னணி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், 8 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா,  5000mAh பேட்டரி, 33W விரைவாக சார்ஜிங் செய்யும் சிறப்பம்சம் முதலானவை இந்த மாடலில் இடம்பெற்றுள்ளன.