கடந்த சில வருடங்களாக பட்ஜெட்டுக்குள் சிறப்பான  ஃபோன் மாடல்களை கொடுத்து ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளது ரெட்மி. ரூ.20 ஆயிரத்துக்குள் அசர வைக்கும் கேமரா, சார்ஜிங், பேட்டரி போன்ற சிறப்பம்சங்களுடன்  பல போன் மாடல்களை ரெட்மி களமிறக்கியுள்ளது. அதன் வரிசையில் வருகிறது Redmi Note 10S. முன்பே இந்த மாடல் இந்தியாவில் வெளியாகப்போவதாக தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 13-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த மாடலை சியோமி வெளியிடுகிறது. தங்களது சோஷியல் மீடியா பக்கத்தின் மூலம் போன் வெளியீடு நடைபெறும் என சியோமி அறிவித்துள்ளது. இந்நிலையில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் வெளியாகாத நிலையில் உத்தேச விலை மற்றும் சிறப்பம்ச விவரங்கள் வெளியாகியுள்ளன.




சிறப்பம்சங்கள்: 



சமீபத்தில் வெளியான ரெட்மி மாடல்களின்படி கணக்கிட்டால் Redmi Note 10S மாடலின் டிஸ்பிளே 6.43 இன்ச் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. செல்ஃபி பிரியர்களை கவரும் விதமாக முன் பக்க கேமரா 13 மெகாபிக்ஸல் கொண்டதாகவும், பின்பக்க கேமராவை பொருத்தவரை 64+8+2+2 மெகா பிக்ஸல்கள் கொண்ட 4 கேமராக்கள் இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 6 GB ரேம், 64 GB ஸ்டோரேஜ் கொண்டதாகவும், 6GB + 128GB,8GB + 128GB ஆகிய வகைகளிலும் இந்த மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.






 


ரேம், ஸ்டோரேஜுகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் இருக்கும். அதன்படி இந்த மாடலின் விலை ரூ.12,499-இல் தொடங்கும் என தெரிகிறது. தற்போது வரும் செல்போன் மாடல்கள் பேட்டரி கெபாசிட்டி 5000 mAhக்கு குறையாமல் இருப்பதால் இந்த மாடலிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரிசல்யூஷன் 1080x2400 pixels ஆகவும், Android 11 மாடலை கொண்டதாகவும் இது இருக்கலாம்.