ரியல்மி நார்சோ 50ஏ


ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ப்ராஸஸர் உள்ளது. ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் சூப்பர் நைட்ஸ்கேப், நைட் ஃபில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்லாப்ஸ், ஸ்லோ மோஷன் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன். ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தின் விலை ரூ.11,499-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ மாடலின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. ஆக்ஸிஜன் ப்ளூ மற்றும் ஆக்ஸிஜன் கிரீன் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன்.



ரியல்மி நார்சோ 50ஐ


ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்ஃபோன் ஆனது Unisoc 9863 SoC சிப்செட் வசதி உள்ளது. 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரியல்மி நார்சோ 50ஐ சாதனத்தின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ மாடலின் விலை ரூ.8,499-ஆக உள்ளது. ஆக்ஸிஜன் ப்ளூ மற்றும் ஆக்ஸிஜன் கிரீன் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போன். Mint Green மற்றும் Carbon Black நிறங்களில்வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.


ரியல்மி நார்சோ 50ஐ மற்றும் ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன்கள் வரும் அக்டோபர் 7-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32 இன்ச்:


32-இன்ச் பேனலை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் டிவியில் சிறந்த பட தரம் (picture quality) மற்றும் ஸ்மூத்தான அனுபவத்திற்காக குவாட் கோர் 64-பிட் மீடியாடெக் ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் பிளே ஸ்டோரை சப்போர்ட் செய்வதால் பிரபலமான இசை மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். யூடியூப், ஈரோஸ் நவ், மற்றும் ஹங்காமா போன்ற ஆப்ஸ்கள் இதில் ப்ரீ-லோடட்டாக இருக்கின்றன. இதில் 2 HDMI போர்ட்கள், USB டைப்-ஏ போர்ட், ஏவி போர்ட் மற்றும் லேன் போர்ட் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் இரண்டு 10W ஸ்பீக்கர்ஸ் மற்றும் டால்பி ஆடியோ டெக்னலாஜி இருக்கிறது. இந்த டிவியில் இன்-பில்ட் குரோம்கேஸ்ட் உள்ளது. 2.4GHz Wifi சப்போர்ட் இருக்கிறது.



ரியல்மி பேண்ட் 2


Realme Band 2 1.4 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே மற்றும் 167x320 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 12.1 மிமீ தடிமன் மற்றும் 27.3 கிராம் எடையுடன் வருகிறது இந்த டிவி. இது 500 நிட்ஸ் பிரைட்னஸை சப்போர்ட் செய்கிறது. தொடர்ச்சியான இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் ரத்த-ஆக்ஸிஜன் நிலை கண்காணிப்பு போன்ற அம்சங்கள் இருக்கிறது. 50 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ்டன்ஸை கொண்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 204mAh ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரை வர கூடியது.


மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.14,999-ஆகும். பின்பு ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32-இன்ச் மாடலை பிளிப்கார்ட், ரியல்மி வலைத்தளம் மூலம் அக்டோபர் 3-ம் தேதி மதியம் 12 மணிமுதல் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.