Realme GT Neo 2: பட்ஜெட் போன்களுக்கு பெயர் பெற்ற ரியல்மி, தற்போது பட்ஜெட்டை தாண்டிச் செல்லும் Realme GT Neo 2 மாடலை வெளியிட்டுள்ளது. Realme GT Neo அதன் முழு வெர்ஷனாக இந்தியாவில் வெளியாகவில்லை. ஆனால் Realme X7 Max கடந்த மே மாதம் இந்தியாவில் வெளியானது. இந்நிலையில் Realme GT Neo 2 மாடல் தற்போது வெளியாகியுள்ளது. 


விலை எவ்வளவு?
Realme GT Neo 2 மாடல் இந்தியாஇல் ரூ.31,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பட்ஜெட் மாடலை விட விலை அதிகமே. இந்த விலையானது 8GB + 128GB மாடலுக்கான விலையாகும்.  12GB + 256GB மாடல் ரூ. 35,999 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அதன்படி நியோ கருப்பு, நியோ சிவப்பு, நியோ பச்சை ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்




சிறப்பம்சங்கள்:
 Realme GT Neo 2 செல்போன் 6.62 இன்ச் டிஸ்பிளே கொண்டதாகவும். சற்று பெரியது என்றாலும், பயன்படுத்த எளிதானகவே இருக்குமென தெரிகிறது. Qualcomm Snapdragon 870 ப்ராசஸர் கொண்டதாகவும் உள்ளது. கேமராவைப் பொருத்தவரை முன்பக்கம் 16-megapixel கொண்டதாகவும், பின்பக்க கேமரா, 64-megapixel + 8-megapixel + 2-megapixel ஆகிய 3 வகை கேமராவைக் கொண்டதாகவும் உள்ளது. இதன் பேட்டரி கெபாசிட்டி 5000mAh ஆக உள்ளது. வழக்கமான புது மாடல்களை போட ஆண்ட்ராய்ட் 11 கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரெசலோஷன் 1080x2400 pixels ஆகவுள்ளது.


எப்போது, எங்கு கிடைக்கும்?
Realme GT Neo 2 மாடலானது அக்டோபர் 17ம் தேதி இரவு 12 மணியில் இருந்து விற்பனையாகிறது. இந்த மாடலை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் வாங்கலாம். இது விழாக்காலம் என்பதால் புதிய ஆஃபர்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.