5000 mAh பேட்டரி திறன்கொண்ட இந்த ஸ்மார்ட் போன் மிகக்குறைந்த விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ரியல்மி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு சீனாவில் தொடங்கப்பட்டது, பிரபல ஓப்போ ஸ்மார்ட் போன் நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் ரியல்மி என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ரியல்மி நிறுவனம் பட்ஜெட் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கிது வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த நிறுவனம் சி 11 2021 என்ற புதிய மாடலை தற்போது வெளியிட்டுள்ளது.    






ரியல்மீ சி 11 2021





ரியல்மி தனது புதிய அப்டேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் போனை தற்போது வெளியிட்டுள்ளது, இந்த போன் வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த போன் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மீ யூ.ஐ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடேக் ஹெளியோ p35 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 2ஜிபி RAM மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் 3ஜிபி ராம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர உள்ளது. 


13 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இந்த போனில் இணைக்கப்பட்டுள்ளது. 5000 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த போனுடன் 10 வாட்ச் சார்ஜிங் கிட் அளிக்கப்படுகிறது. இந்தியாவில் மின்ட் க்ரீன் மற்றும் Pepper Grey ஆகிய 2 வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் வெளியாகவுள்ளது. மேலும் இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரத்து 700 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட் போன் விற்பனையாகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 


இந்த கொரோனா தொற்று சூழலில் பல ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய புதிய மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இந்திய சந்தையில் பல போன்கள் அறிமுகமாகி வருகின்றன. மேலும் பல நிறுவனங்கள் தங்களுடைய பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. சியோமி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பலதரப்பட்ட ஸ்மார்ட் போன்களை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. குறிப்பாக சியோமி நிறுவனம் தனது புதிய 11 லைட் மாடல் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.