பட்ஜெட் ஃபிரண்ட்லி மொபைல்போன்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிறுவனம் ரியல்மி .ரியல்மியின் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த மொபைல்போன்கள் தற்போது 15 ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இந்நிலையில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக 5ஜி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ரியல்மி நிறுவனம் உள்ளது. குறைந்த பட்ஜெட்டிலான 5ஜி மொபைல்போன்களை தேடிவரும் பயனாளர்களின் நம்பர் ஒன் சாய்ஸாக தங்கள் நிறுவனம் இருக்க வேண்டும் என்பதே ரியல்மியின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. இதற்காக சிப்செட் உற்பத்தி மற்றும் மற்ற பாகங்களை தயாரிப்பதற்காக சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ரியல்மி.சிப்செட்டை பொருத்தவரையில் மீடியா டெக் டைமன்சிட்டி 700 ஆக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது பட்ஜெட் மொபைல் போன்களுக்கான மேம்பட்ட திறனை வழங்குகிறது.



இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரியல்மி ஆறு வகையான 5ஜி தொழில்நுட்ப  மொபைல் போன்களை சந்தைப்படுத்தியது. இந்நிலையில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலை மொபைல்போன்கள் அனைத்திலும் 5ஜி தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே 5 மில்லியன் 5ஜி தொழில்நுட்ப மொபைல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் விலை 10 ஆயிரத்திற்கு  குறைவாக இல்லை, இந்நிலையில் ரியல்மி இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது.



 
முன்னதாக இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரியல்மியின் இந்திய  முதன்மை செயல் அலுவலர்
மாதவ் ஷேத் ”இந்தியாவின் முன்னணி 5ஜி மொபைல் தாயாரிப்பு நிறுவனமாக ரியல்மி விளங்கும், எனவும் 7 ஆயிரம் ரூபாய் விலையில் இந்த ஆண்டு இறுதியில் ஒரு மொபைல்போனை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெற்று  வருவதாக ட்விட்டர் வாயிலாக அறிவுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் இது தற்போது முதற்கட்ட  ப்ளானிங்கில் உள்ளது. இந்நிலையில் ரியல்மி சி சீரிஸ் மொபைல்போன்கள் 5ஜி தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் இவற்றின் விலை 10 ஆயிரம் ரூபாக்கும் குறைவாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது ஒரு புறம் இருக்க   ரியல்மியின் 5ஜி சாதனங்களை அதிகப்படுத்த , தொழில்நுட்ப வல்லுநர்களிடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் மாதாவ்.


அடுத்த ஆண்டு தொடங்கத்தில் பட்ஜெட் விலை (10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக )ரியல்மி 5ஜி தொழில்நுட்ப மொபைல்போன்களை சந்தைப்படுத்த வேண்டும் என்பதே அந்நிறுவனத்தில் இலக்காக உள்ளது. இந்தியாவில் 5ஜி சோதனையை ஏர்டெல், ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடித்துள்ள நிலையில், விரைவில் அனைவருக்குமான சேவையாக 5ஜி உருவெடுக்கும். அப்போது மக்கள் அனைவரும் 5ஜி சேவை அடங்கிய மொபைல்போன்களை வாங்குவதிலேயே அதிக நாட்டம் செலுத்துவார்கள் , அவர்கள்தான் ரியல்மியின் டார்கெட்டாக உள்ளது. கடந்த மே மாதத்தில் கிட்டத்தட்ட 14 சதவிகிதம் பேர் 5ஜி மொபைல்போன்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தியுள்ளனர். இது கணிசமாக உயர்ந்து அடுத்த ஆண்டில் உச்சத்தை அடையும். மொபைபோன்கள் தவிர்த்து மற்ற சாதனங்களிலும் 5ஜி சேவையை புகுத்துவதில் ரியல்மி ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.