பட்ஜெட் மொபைல் பிரியர்களின் சாய்ஸில் ஒன்று ரியல்மி ஸ்மார்ட்போன்கள் . பொதுவாக மொபைல்போன்கள் வெளியாவதற்கு முன்னதாக அது குறித்த அப்டேட் இணையத்தில் கசிய தொடங்கும் ஆனால் ரியல்மி தனது புதிய பட்ஜெட் மொபைலை திடீரென சந்தைப்படுத்தியது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெளியான
என்னென்ன வசதிகள் இருக்கு?
- கிரே மற்றும் ஊதா என இரண்டு நிறங்களில் அறிமுகமாகியுள்ள Realme C25s ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்தில் 6.5 இஞ்ச் திரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது
- LCD மல்டி தொடுதிறை தொழில்நுட்பத்துடன் 570 nits பிரைட்னஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Helio G70 புராஸசருடன் உருவாக்கப்பட்டுள்ளது.
- பின்பக்கம் மூன்று கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 13 மெகா பிக்சல் சென்சார், 2 மெகா பிக்சல் கருப்பு வெள்ளை சென்சார், 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ் இதில் அடங்கும். 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது
- Realme C25s ஐ பொருத்தவரையில் பட்ஜெட் விலையில் தரமான பேட்டரி லைஃப்வுடன் உருவாக்கப்பட்டுள்
ளது 6,000mAh திறனுடன் , 18 வாட் அதிவேக சார்ஜிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் வசதியுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் கூடுதல் கவனத்தை பெறுகிறது.
விலை எவ்வளவு ?
4GB RAM மற்றும் 64GB நினைவக திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள மொபைலின் விலை 10,999 ரூபாயாகவும், 4GB RAM மற்றும் 128GB நினைவக திறனுடைய மொபைல்போனானது 9999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.