கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியவுடன், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஸ்மார்ட்போன்களில் ஆப்களை இன்ஸ்டால் செய்வது உயர்ந்தது. லாக்டவுன் காலத்தில் வீட்டில் பொழுதைக் கழிக்க அதிகளவில் ஆப்களை இன்ஸ்டால் செய்த மக்கள் தற்போது தடுப்பூசிகளின் வருகைக்குப் பிறகு, இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். கூகுள் தளத்தில் 1.2 சதவிகிதக் குறைவும், ஆப்பிள் தளத்தில் 2.1 சதவிகிதக் குறைவும் தென்பட்டுள்ளது. எனினும் இந்த நிறுவனங்களின் ஆப்களில் இருந்து கிடைக்கும் வருவாய் பெருகியுள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டின் கணக்கீட்டின்படி, உலகம் முழுவதும் கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் ஆப்களை வாங்குவதற்காகவும், ஆப்களைப் பயன்படுத்தும் சிறப்பு வசதிகளுக்காகவும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் மொத்தமாக சுமார் 33.6 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் ஆப் விற்பனையின் மூலம் 29.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. கடந்த ஆண்டு, இந்த தொகை தடாலடியாக சுமார் 32 சதவிகிதம் உயர்ந்தது.
இதில் ஆப்பிள் நிறுவனம் ஒப்பீட்டளவில் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு ஆப் விற்பனை வருவாய் 21.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. கூகுள் நிறுவனம் 12.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது.
சென்சார்டவர் என்ற புள்ளிவிவரங்கள் தளம் கூகுள், ஆப்பிள் ஆகிய இரு ஆப் ஸ்டோர்களிலுமே அதிக வருவாய் ஈட்டிய ஆப்பாக இடம்பெற்றுள்ளது. தற்போது வரை சுமார் 300 கோடி பேர் டிக்டாக் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளனர். பேஸ்புக் அல்லாமல் அதிகளவில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் முதல் செயலியாக டிக்டாக் சாதனை படைத்துள்ளது.
எனினும் ஆப்பிள் ஸ்டோரில் முதலிடத்தில் இருந்த டிக்டாக், கூகுள் ஸ்டோரில் இடம்பெறவில்லை. கூகுள் ஸ்டோரில் முதல் இடத்தில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஒன் செயலி இடம்பெற்றிருந்தது. Piccoma இரண்டாம் இடத்திலும், Youtube, Disney+ ஆகிய செயலிகள் அடுத்தடுத்த இடங்களிலும் வந்துள்ளன.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, மொபைல் கேம்களின் மீது பயனாளர்கள் சுமார் 22.4 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளனர். அதிகளவில் விற்பனையான கேம்களில் பப்ஜி முதலிடம் பெற்றுள்ளது. சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ள பப்ஜிக்கு அடுத்த இடத்தில், Honor of Kings கேம் இடம்பெற்றுள்ளது. இந்த கேம் பப்ஜி கேமைத் தயாரித்த அதே டென்செண்ட் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு. அடுத்தடுத்த இடங்களில் Genshin, Pokemon Go, Roblox ஆகிய கேம்கள் இடம்பெற்றுள்ளன. பப்ஜி கேமுக்கு அதிக பயனாளர்கள் இருக்கும் இந்தியாவில் பப்ஜி தடைசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.