இந்தியாவை பொறுத்தவரை பல ஆண்டுகளாக மோட்டார் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. அதே போல இந்தியாவில் டொயாட்டோ நிறுவனம் SUV எனப்படும் பெரிய ரக கார்கள் உற்பத்தியில் பெரும் பங்கை வகித்து வருகின்றது. கிய்ச்சிரோ டொயோட்டா என்பவரால் 1930-களில் ஜப்பான் நாட்டை மையமாக கொண்டு டொயோட்டா நிறுவனம் தொடங்கப்பட்டது. பல நாடுகளில் பல வகை கார்களை அறிமுகம் செய்துள்ள இந்த நிறுவனம் அண்மையில் முதல் முறையாக எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில் பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்களுடைய வாகனங்களின் விலையில் இந்திய சந்தையில் உயர்த்திவரும் நிலையில், டொயாட்டோ நிறுவனமும் தங்களுடைய கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. 




இதுகுறித்து டொயாட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம் வெளியிட்ட பதிவில், டொயோட்டா கேம்ரி கார்கள் தற்போது முன்பைவிட ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபாய் அதிகப்படுத்தப்பட்டு சுமார் 40.59 லட்சத்திற்கு விற்பனையாகவுள்ளது. மேலும் டொயோட்டா கிரிஸ்டா பேஸ்லிப்ட் கார்கள் சுமார் 25 ஆயோரம் ரூபாய் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 




அதனைத்தொடர்ந்து டொயோட்டா கிரிஸ்டா கார்களின் டீசல் மற்றும் பெட்ரோல் மாடல் கார்கள் முறையே 16.52 மற்றும் 16.90 லட்சம் என்று விலையேற்றம்பெற்றுள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகும் பார்ச்சூனர் கார்களும் விலையேற்றம் பெற்றுள்ளது.