ஜி.எஸ் 101 என்று அழைக்கப்படும் புதிய பிராசஸர் ஒன்றை சாம்சங் நிறுவனத்தின் உதவியோடு கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளதாக சில தகவல்கள் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. பிக்செல் 6 ஸ்மார்ட்போன்களில் இந்த புதிய அதிலும் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான பிராசஸர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்செல் 6 ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதமே இந்திய சந்தையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கூகுள் சிலிக்கான் :
GS 101 அதாவது கூகுள் சிலிக்கான் 101 எனப்படும் இந்த பிராசஸர் மூலம் கூகுள் நிறுவனம் மூன்றாம் மற்றும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிறுவனங்களை சார்ந்த இல்லாமல் தனித்து செயல்படமுடியும். இதுஒருபுரம் இருக்க தற்போது கூகுள் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்தின் வழியில் செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்கள் மற்றும் மேக்புக்களில் தன்னுடைய சொந்த சிப்செட்டைகளை மட்டுமே பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It’s 4/3/21. See what we did there? <a >pic.twitter.com/QtJiKxuvUs</a></p>— Made By Google (@madebygoogle) <a >April 3, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
எனினும் பிக்செல் 6 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்த பிறகே பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்பது நிதர்சனம்.