புது போன் வாங்கி இருக்கேன்னு நண்பர்கள் யாராவது சொன்னால், நம்முடைய முதல் கேள்வி விலை. அடுத்த கேள்விகள் கேமரா குறித்தும், பேட்டரி குறித்தும் தான். ‛எவ்ளோ நேரம்பா சார்ஜ் நிக்குதுனு,’ சார்ஜிங் கெபாசிட்டியை தெரிந்துகொள்வதுதான் இந்திய பயனாளர்களின் மனநிலை. அதைக் கருத்தில் கொண்டு தான் இன்று செல்போன் நிறுவனங்களும் தங்களது மாடல்களை சந்தையில் இறக்குகின்றன. அதிவேக சார்ஜர், நீண்ட நேரம் சார்ஜ் தாங்கும் பேட்டரி இவையெல்லாம் செல்போன் ரசிகர்களை கவரும் சிறப்பம்சங்கள். ஆனால் என்னதான் நல்ல நிறுவனம் என்றாலும், நாளாக நாளாக செல்போன் சார்ஜில் பிரச்னை வரத்தான் செய்கிறது. நல்லா சார்ஜ் நின்னுச்சு.. இப்போவெல்லாம் சீக்கிரம் ட்ரை ஆகிடுதுனு புலம்பும் ஆட்களுக்கு சில டிஸ்ப் சொல்லத்தான் இந்த செய்தி.
100% வேண்டாம்:
சார்ஜர்:ஒவ்வொரு பேட்டரிக்கும், செல்போன் நிறுவனத்திற்கும் தனித்தனி சார்ஜர் உண்டு. சி டைப் என்றாலும் வாட்ஸ் கணக்கு மாறுபடுகிறது. எனவே உங்கள் செல்போனுக்கான சார்ஜரை மட்டுமே எப்போதும் பயன்படுத்த வேண்டும். லேப்டாப்பில் சார்ஜ் செய்வது, கார், பைக்கில் சார்ஜ் செய்வது அவசரத்திற்கு சரி என்றாலும், அதனை வாடிக்கையாக செய்யக் கூடாது.
ஏரோபிளேன் மோடு:
டார்க் மோட்:செல்போனில் லைவ் வால்பேப்பர் என்ற ஆப்ஷன் சார்ஜுக்கு எதிரி. சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்க வேண்டுமென விரும்புபவர்கள் லைவ் வால்பேப்பர் பக்கம் செல்லவே கூடாது. அதற்கு பதிலாக டார்க் வால்பேப்பரை பயன்படுத்தலாம். அதேபோல இப்போதெல்லாம் செயலிகளே டார்க் மோட் ஆப்ஷனை கொண்டு வந்துவிட்டன. முடிந்தவரை டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். டார்க் மோட் சார்ஜை சேமிக்கும். இதனால் வேகமாக பேட்டரி ட்ரை ஆவது தடுக்கப்படும். பிரைட்னஸ்:
லொகேஷன்:செல்போனில் உள்ள சில ஆப்ஷன்கள் எப்போதும் ரன்னிங்கிலேயே இருக்கும். அதாவது இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் நீங்கள் செல்போன் பயன்படுத்த வில்லை என்றாலும் சார்ஜ் குறைந்துகொண்டே இருக்கும். அதில் முக்கியமான ஒன்று லொகேஷன். 24 மணி நேரமும் செல்போனில் லொகேஷனை ஆன் செய்ய தேவையில்லை. லொகேஷன் தொடர்பான தேவைகள் இருந்தால் மட்டுமே லொகேஷனை ஆன் செய்து மீண்டும் ஆஃப் செய்துகொள்ளலாம். அதேபோல சில சோஷியல் மீடியாக்களில் ஆடோ ப்ளே முறையில் வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். அதனை நிறுத்தி வைக்கலாம். தேவையில்லாத செயலிகளை நீக்குவது செல்போனுக்கும், பேட்டரிக்கும் நல்லது.
ரெஸ்ட் கொடுங்க:செல்போனுக்கும் ரெஸ்ட் கொடுக்க வேண்டும். வாரத்திற்கு 1 மணி நேரமாவது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்க வேண்டும். நாம் பயன்படுத்தாத ஏதாவது ஒரு மணி நேரம் செல்போனுக்கு ஓய்வு கொடுத்தால் பேட்டரியின் ஆயுள் மட்டுமின்றி செல்போனின் ஆயுளும் கூடும்.