ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முதல் டேப்லெட் 'ஒப்போ பேட் ஏர் (Oppo Pad Air)' நேற்று அதாவது ஜூலை 18 ஆம் தேதி வெளியானது. கவர்ச்சிகரமான வண்ணத்தில், நல்ல வெளித்தோற்றத்துடன் வந்திருக்கும் இந்த டேப்லெட், ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.


ஸ்லிம் வடிவமைப்பு


மெட்டல் பாடியுடன் வரும் 'Oppo Pad Air' ஆனது வெறும் 6.94 மிமீ தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. அதனால்தான் ஒப்போ நிறுவனம்,10-இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் மிகவும் 'லைட்' ஆன மற்றும் ஒல்லியான டேப்லெட் என்று அடித்து கூறுகிறது. அந்த டேப்லெட்டின் திரை 2000 x 1200 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 10.36-இன்ச் 2K டிஸ்பிளேவை கொண்டுள்ளது.



பிராசசர்


இந்த டேப்லெட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-இன் அடிப்படையிலான, ஓப்போ நிறுவனத்தின் சொந்த லேயர் கலர்ஓஎஸ் 12 கொண்டு இயங்குகிறது. ஸ்நாப்ட்ராகன் என்பதாலும், ஆண்டராய்டு 12 என்பதாலும் இதற்கான மவுசு மென்மேலும் அதிகரித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Self-powered smartwatch : பேட்டரியும் வேண்டாம் ! சார்ஜரும் வேண்டாம் ! - புதிய ஸ்மார்ட்பேண்ட்! ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!


ஸ்பீக்கர், பேட்டரி & கேமரா


டால்பி அட்மோஸ் வசதியுடன் நான்கு ஸ்பீக்கர்களுடன் வரும் இந்த ஒப்போ டேப்லெட்டின் சவுண்ட் குவாலிட்டிக்கு ஏர்போன் தேவை இல்லை என்கிறார்கள். இந்த டேப்லெட் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இதன் பேட்டரி அளவு 7100mAh கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும் என்கிறார்கள். இந்த டேப்லெட்டில் f/2.0 லென்ஸ் உடன் 8MP ரியர் கேமரா ஒன்றே ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 5MP செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது..



விலை


இந்தியாவில் ஒப்போ பேட் ஏர் டேப்லெட்டை 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களின் கீழ் அறிமுகம் செய்துள்ளார்கள். 64ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.16,999 க்கும், 128ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.19,999 க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் இம்மாதம் 23 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பிரத்யேக கீபோர்டு மற்றும் ஸ்டிக்


இந்த டேப்லெட்டில் கனெக்ட் செய்து பயன்படுத்துவதற்கான பிரத்யேக கீபோர்டு மற்றும் ஸ்டிக் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஸ்டைலஸ் மாற்றும் மேக்னட்டிக் கீபோர்டு என இந்த ஒப்போ பேட் ஏர்-க்காக இரண்டு பிரத்யேகமான சாதனங்கள் தயாரிகப்பட்டுள்ளன. ஸ்மார்ட் ஸ்டைலஸ் ஆனது எடையில் வெறும் 18 கிராம் மட்டுமே உள்ளது ஆச்சர்யமாளிக்கிறது. மற்றும் இதனுடன் 650mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. மேக்னட்டிக் கீபோர்ட் ஆனது ப்ளூடூத் 5.0 உடன் வருகிறது. இரண்டையும் தனியாக சார்ஜ் செய்துகொண்டுதான் பயன்படுத்த வேண்டும். இதன் விலை விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.