இந்தியாவில் குறைந்த நாட்களிலேயே பலரின் ஃபேவரைட்டாக மாறிப்போன நிறுவனம் “ஒன் ப்ளஸ் “ .மொபைல் விற்பனையில் ஒரே வருடத்தில் புதிய மைல் கல்லை பதித்தது ஒன் பிளஸ். இந்நிலையில் இந்தியாவில் தனது அடுத்த புதிய படைப்பை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஒன் பிளஸ் நோர்ட் 2 மொபைல் போன்கள் குறித்த வதந்திகள் வெளியாகின. இது இந்தியாவில் வெளியாகுமா வெளியாகாதா என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் ஒன் பிளஸ் ரசிகர்கள். இந்நிலையில் ட்ரைலர் ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம். இதன் மூலம் விரைவில் இந்தியாவிற்கு ஒன் பிளஸ் நோர்ட் 5ஜி மொபைல்போன்கள் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளன.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒன் பிளஸ் நோர்ட் என்ற பெயரிலான மொபைல்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 4 ஜி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனுடைய அடுத்த வெர்ஷனான ஒன் பிளஸ் நோர்ட் 2 ஆனது , 5 ஜி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன் பிளஸ் நோர்ட் 2 இல் ஏராளமான ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஷன்ஸ் திறன்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. AI தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை எடுக்க முடியுமாம். குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் 2 , AI Photo Enhancement என்ற ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 22 வெவ்வேறு புகைப்படக் காட்சிகளை அடையாளம் காணலாம், இதன் அடிப்படையில் தானாகவே புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடத்திற்கு ஏற்ப வண்ணங்களை மாற்றியமைத்து அழகான புகைப்படங்களை பதிவு செய்யுமாம். இதே வசதி வீடியோவிற்கு உள்ளது.
ஒன்பிளஸ் , மீடியாடெக்குடன் இணைந்து டைமன்சிட்டி 1200-AI என்ற புராசஸருடன் கூடிய ஒன் பிளஸ் நோர்ட் 5ஜி மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுவே மீடியாடெக் புராசஸருடன் வெளிவரும் முதல் ஒன் பிளஸ் மொபைல்போன் என்பது குறிப்பிடத்தகக்து. முன்னதாக மீடியா டெக் டைமன்சிட்டி 1200 புராசஸரானது ஆனது ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் போன்ற சில ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது. ஆனாலும் ஒன் பிளஸ் நோர்ட் 2 மொபைல்போனுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் முந்தைய டைமன்சிட்டி 1200 புராசஸருக்கும் இதற்கும் நிறைய மாறுபாடுகள் இருக்குமென கூறப்படுகிறது.
துல்லியமான மற்றும் ஹை குவாலிட்டி புகைப்படங்கள் எடுப்பதில் இது முந்தைய ஒன் பிளஸில் இருந்து பயனாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மிட் ரேன்ச் மொபைல் போனாக களமிறங்கவுள்ள ஒன் பிளஸ் நோர்ட் 2 5ஜி ஆனது, இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். முந்தையை ஒன் பிளஸ் மொபைல்கள் அறிமுகமானதைப்போலவே , இதுவும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது