ஒன்பிளஸ் வாட்ச் (oneplus) நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும், இந்த ஒன்ப்ளஸ் வாட்சில் AMOLED டிஸ்ப்ளே கொண்ட வட்ட டயல் மற்றும் ஸ்போ 2 டிராக்கிங் ஆகியவை இந்த காலங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய அம்சமாகும். மேலும் ஒன்பிளஸ் கடிகாரத்தில் இரத்த ஆக்ஸிஜன் அளவை அளவிட SpO2 சென்சார் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.


இந்தியாவில் ஒன்பிளஸ் வாட்சின் விலை?


இந்தியாவில் ஒன்பிளஸ் வாட்சின் விலை ரூ. 14,999 ரூபாய் ஆகும். விரைவில் இந்த வாட்சில் கோபால்ட் லிமிடெட் பதிப்பில் இருப்பதோடு அதிக விலையில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த வாட்சின் விலை மற்றும் எப்பொழுது சந்தைப்படுத்தலுக்கு வருகிறது என்பது குறித்த எந்தவித தகவல் வெளிவரவில்லை.


ஒன்பிளஸ் வாட்சின் வடிவமைப்பு!


ஒன்பிளஸ் வாட்சின் வடிவமைப்பு மற்ற வாட்ச்களை ஒப்பிடும் போது மாறுபட்டு உள்ளது. குறிப்பாக பெரும்பாலான ஸ்மார்ட் வாட்ச்கள் சதுரம் அல்லது வட்ட வடிவத்துடன் கிடைக்கின்றன. இந்த ஒன்பிளஸ் வாட்சில் எஃகினால் தயாரிக்கப்பட்ட ஒரு 46 மிமீ வட்ட வடிவ டயலைக்கொண்டுள்ளது. இதில் மின் நைட் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர் (Midnight Black and Moonlight Silver) ஆகிய வண்ணங்கள் உள்ளன. 



ஒன்பிளஸ் வாட்சின் மென்பொருள் விபரங்கள்.


ஒன்பிளஸ் வாட்சினை முதலில் கூகிளின் WearOS ஐ இயக்கும் மற்றும் ஸ்னாப்டிராகன் வேர் 4100 செயலியைக் கொண்டிருக்கும் என்ற தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அப்படி எதுவும் இல்லாமல், ஒன்பிளஸ் வாட்ச் தனிப்பயன் ரியல்-டைம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை  கொண்டு (RTOS) இயக்குகிறது. மேலும் இதில்  சுவாரஸ்யமாக மூன்று தனித்துவமான செயலிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்பாட்டினை மேற்கொள்கின்றனர்.


ஒன்பிளஸ் வாட்ச் ST32, அப்பல்லோ 3 மற்றும் சைப்ரஸ் சில்லுகளின் (ST32, Apollo 3, and Cypress chips) கலவையைப் பயன்படுத்துகிறது.  மேலும் இதில் ஒரு முடுக்கமானி, சுற்றுப்புற ஒளி சென்சார், கைரோஸ்கோப், புவி காந்த சென்சார், காற்றழுத்தமானி, இரத்த ஆக்ஸிஜன் சென்சார் மற்றும் இதய துடிப்பு சென்சார் ஆகியவை உள்ளன. புளூடூத் 5, என்.எஃப்.சி மற்றும் நான்கு செயற்கைக்கோள் வழிசெலுத்தல் ( Bluetooth 5, NFC, and four satellite navigation systems) அமைப்புகளுடன் உள்ளது. இதோடு 4 ஜிபி சேமிப்பிடத்தையும் இந்த வாட்ச் கொண்டுள்ளது.  மேலும் ஒன்பிளஸ் வாட்சில், ஆஃப்லைனில் கேட்பதற்கு  சில ஆடியோ டிராக்குகளை சேமிக்கும் வசதிகள் உள்ளது. 


ஒன்பிளஸ் வாட்சின் செயல்திறன் மற்றும் பேட்டரின் ஆயுள் காலம்.


ஒன்பிளஸ் வாட்சில் UI உள்ளதால் வழிசெலுத்தலை (Navigating) மிகவும் எளிதாக்குகிறது. ஒன்பிளஸ் வாட்ச் முதலில் எப்போதும் காட்சி திறனைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் இது அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே மென்பொருள் புதுப்பிப்பின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது. இதை நாம் கடிகாரத்திலிருந்தே இயக்கவும் மற்றும் நான்கு முகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கலாம் என்ற செயல்திறன் கொண்டுள்ளது. இதோடு  ஒன்பிளஸ் வாட்சில் திரை பிரகாசத்தை தானாக சரிசெய்யக்கூடிய சுற்றுப்புற ஒளி சென்சார் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது.


இந்த ஒன்பிளஸ் வாட்ச் தூக்கத்தினை கூட துல்லியமாக கண்காணிக்கிறது. இதோடு மட்டுமின்றி  நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளையும், இதய துடிப்பு, மன அழுத்தம், SpO2 போன்றவற்றையும் துல்லியமாக கண்காணிக்கிறது. SpO2 கண்காணிப்பு எந்தளவில் துல்லியமாக உள்ளது என்பது குறித்து சோதனை செய்து பார்த்த போது, சாம்சங் கேலக்ஸி எஸ் 10 பிளஸ்ஸில் காணப்படும் அதே அளவீடுகளே கிடைத்தன. மேலும் இந்த ஒன்பிளஸ் வாட்சில் டிராக்கிங் துல்லியமாக இருந்தது.


இதோடு மட்டுமின்றி  ஒன்பிளஸ் வாட்சில் ஒரு ஸ்பீக்கர் வசதியும் உள்ளது. மேலும் நமக்கான அழைப்புகள் வரும் பொழுது ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன் ஆகிய இரண்டினையும் பயன்படுத்தலாம். கடிகாரத்தை காதுக்கு அருகில் உயர்த்தினால் ஸ்பீக்கர் அளவு போதுமானதாகவும், சற்று தொலையில் வைக்கும் பொழுது அதற்கான மாற்றம் ஏற்படுவது தெரியும்.


 



குறிப்பாக ஒன்பிளஸ் வாட்சில் ஒரு முறை சார்ஜ் செய்தால்  பேட்டரி ஆயுள் 12 நாட்கள் வரை நீடிக்கிறது. இதில் உடற்பயிற்சி போன்ற எந்த அளவுகளையும் கண்காணிக்காமல், அறிவிப்புகளுக்கு மட்டும் பயன்படுத்தினால் 2 வாரங்கள் வரை பேட்டரியின் ஆயுட்காலம் உள்ளது.  ஒன்ப்ளஸ் வாட்ச் நிறுவனம் வார்ப் சார்ஜ் என்று அழைக்கும் வசதியுடன் உள்ளது. 


 ஒன்ப்ளஸ் வாட்ச் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பாக இருந்தாலும் கூகுளின்  WearOS இதில் இல்லை. எனவே கூகுளின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பயன்பாடுகளின் இதில் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தபோதும் மற்ற நல்ல பேட்டரி ஆயுள், துல்லியமான தூக்க கண்காணிப்பு ஆகியவை மற்ற ஸ்மார்ட் வாட்ச் போலவே செயல்படுகிறது.