பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன் பிளஸ் தனது புதிய மொபைல் மாடல் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வரை விலை குறைப்பு செய்துள்ளது. இது எப்போது அமலுக்கு வரும் உள்ளிட்ட தகவல்களைக் காணலாம். 

Continues below advertisement

ஒன் பிளஸ் 13 மொபைல்

ஸ்மார்ட்போன் மொபைல் துறையில் ஒன் பிளஸ் நிறுவனம் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது. மிக குறைந்த விலையில் அதிக அளவிலான சிறப்பம்சங்களுடன் கூடிய இதன் ஸ்மார்ட்போன்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர். இப்படியான நிலையில் ஒன் பிளஸ் நிறுவனம் அடுத்ததாக ஒன் பிளஸ் 13 என்ற மொபைலை விற்பனைக்கு கொண்டு வருகிறது. 

பிரீமியம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது ஒருங்கிணைக்கப்பட்ட அட்ரினோ 830 கிராபிக்ஸ் பிராசஸிங் யூனிட்டுடன் இணைந்து செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 6.82-அங்குல QHD+ LTPO 3K டிஸ்ப்ளே பேனல் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருக்கிறது. நீடிக்கும் பேட்டரி பேக்கப் வழங்கும் வகையில் 6,000mAh பேட்டரி திறன் உள்ளது. 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வசதியான 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியையும் வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு 15 வெர்ஷனுடன் இந்த போன் வருகிறது. 

Continues below advertisement

இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 32 MP கேமரா இடம் பெற்றுள்ளது. 

ரூ.12 ஆயிரம் வரை தள்ளுபடி

சமீபகாலமாக ஸ்மார்ட்போன் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில் ஒன் பிளஸ் 13 மொபைல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.69,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான   Flipkart வரும் ஆகஸ்ட் 8ம் தேதி Freedom Sale 2026 விற்பனையை தொடங்குகிறது. சுமார் ஒரு வார காலம் நடக்கவுள்ள இந்த விற்பனையில் பல பொருட்கள் விற்பனை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

Also Read: Poco M8 Power: 3 நாட்கள் நிற்கும் சார்ஜ்.. போகோ நிறுவனத்தில் அசத்தல் ஸ்மார்ட்போன் இதோ!

இப்படியான நிலையில் Freedom Sale 2026 விற்பனையில் ஒன் பிளஸ் 13 ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த போனின் விலை ரூ. 57,885 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதன் உண்மையான விலையிலிருந்து ரூ.12,114 தள்ளுபடியாகும்.  குறிப்பிட்ட கிரெடிட் கார்டு சலுகைகளைப் பயன்படுத்தி இந்த ஆன்லைன் விலையை மேலும் குறைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Flipkart Axis Bank அல்லது SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் ரூ. 2,895 வரை குறைய வாய்ப்புள்ளது. இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் வசதி போன்றவையும் அதில் உள்ளது.