இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதையெடுத்து ஓலா நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில், ஓலா S1 Pro ரக மாடலில் புதிய Move OS 3.0 சாஃப்ட்வேர் அப்டேட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் ரக வாகன சந்தையில் ஓலா நிறுவனம் தனக்கான மார்க்கெட் அதிகரிக்க புதிய அப்டேட்களுடன் மக்கள் அதிகம் விரும்பும் வசதிகள் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹைப்பர்சார்ஜர் வசதியை கொண்டு வந்துள்ளது ஓலா நிறுவனம்.
இது ஓலா ஸ்கூட்டரின் S-1 மற்றும் S-2 ஆகிய மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹைப்பர் சார்ஜிங் சிஸ்டம் :
இந்த ஹைப்பர்சார்ஜிங் ரக ஓலா ஸ்கூட்டர்கள் தற்போது புது டெல்லியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பரிசோதனை அடிப்படையில் மூன்று வாகனங்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது.
ஓலா S-1 Move OS 3.0 மாடலில் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்தால் 50 கி.மீ வரை பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 கி.மீ. வரை பயணிக்கலாம். அவசர தேவைகளுக்கு இந்த மாடலை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வெகு விரைவாக முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்.
இதில் Advancec Regen, Vacation Mode, Hill Mode ஆகிய புதிய தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. Advancec Regen -ல் டிரைவிங்கிற்கு ஏற்ப ரீஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம் வேலை செய்யும்.
ஹில் மோட் :
மலைப்பகுதிகளுக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கு புதிய அப்டேட் மிகவும் பயனளிக்கும். அதாவது, மலை வளைவுகளில் செல்லும்போது, ‘ஹில் மோட்’ எனேபிள் செய்தால் போதும்; ஸ்கூட்டர் பின்னோக்கி செல்லாமல் இருக்க, பிரேக்கிங் சிஸ்டம் தகவமைத்து கொள்ளும்.
வெக்கேசன் மோட் :
இதை எனேபல் செய்வது மூலம் வெகு தொலைவு பயணம் செய்வதற்கு ஏற்றவாறு சார்ஜிவ் வசதியை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். பயண திட்டங்களின்போது மிகவும் உதவியாக இருக்கும். ஸ்கூட்டரை நிறுத்தி வைத்திருந்தாலும் 200 நாட்கள்வரை சார்ஜிங் குறையாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Proximity Unlock :
பிராக்ஸிமிட்டி லாக் வசதி நீங்கள் ஸ்கூட்டரை விட்டுச் சென்றதும் லாக் ஆகிவிடும். ஸ்கூட்டர் அருகில் வந்ததும் தானாகவே அன்- லாக் (Unlock) ஆகிவிடும்.
வை-பை வசதி:
புதிய சாஃப்வேர் அப்டேட்படி, இனி ஸ்கூட்டரில் வை-பை மூலம் டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் இதில் சாஃப்ட்வேர் கோளாறுகள் ஏதும் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ப்ளுடூத் காலிங்:'
இந்த ப்ளுடூத் காலிங் வசதி மூலம் உங்கள் மொபைலுக்கு அழைப்பு வந்தால், ஸ்கூட்டர் ஸ்கிரினில் நொட்டிவிகேசன் வரும்.
பார்ட்டி மோட்:
ஸ்கூட்டரில் பாட்டு, இசை பிளே செய்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பார்ட்டி மோடில், ஸ்கூட்டரில் வண்ண வண்ண நிறங்களால் ஒளிரும். பார்ட்டி லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் உள்ள ஸ்கிரின் நம் முழு விவரங்களையும் பதிவுசெய்து வைத்துக்கொள்ளலாம். பாதுகாப்பு லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளது