டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், டிவிட்டரில் கால் செய்யும் திறன் மற்றும் encrypted messaging உள்ளிட்ட புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளார்.


டிவிட்டரில் ஏற்பட்டு வரும் மாற்றம்


எலன் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்துங ட்விட்டர் ஏடாகூடமாக மாறி வருகிறது. ட்விட்டர் என்னும் அடிப்படையான தத்துவத்தில் பலவற்றையும் மாற்றி அதிர்ச்சி அளித்தார். காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை டுவீட் செய்யலாம் என்பது வரை, எல்லா அப்டேட்டுகளும் விமர்சனங்கள் பெற்றாலும், அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.


அதில் சமீபத்தியதுதான் ட்விட்டர் காலிங் வசதி. “ட்விட்டரின் சமீபத்திய பதிப்பின் மூலம், நீங்கள் த்ரெட்டில் உள்ள எல்லா செய்திக்கும் DM-இல் பதிலளிக்கலாம். மேலும் அதற்கு ரியாக்ஷன் செய்ய எந்த ஈமோஜியையும் பயன்படுத்தலாம். encrypted DM வசதி கொண்ட இந்த 1.0 வேர்ஷன், நாளை வெளியாகும். இது அதிவேகமாக அதிநவீனத்தில் வளரும்" என்று எலோன் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.



வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி


மெசேஜ் செய்வது encrypt செய்யப்படுவது புதன்கிழமை முதல் ட்விட்டரில் கிடைக்கும் என்றும் மஸ்க் அறிவித்தார். இருப்பினும், அழைப்புகளும் encrypt செய்யப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை. “என்ன ஆனாலும் என்னால் உங்கள் மேசேஜ்களை பார்க்க முடியாது என்பது ரிஸ்கான விஷயம்தான். ட்விட்டரில் உள்ள எல்லோருக்கும் உங்கள் ட்விட்டர் கணக்கில் இருந்து, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி விரைவில் வரும்.


தொடர்புடைய செய்திகள்: S. M. Nasar: அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. கடுப்பான முதலமைச்சர் ஸ்டாலின்..நாசர் அமைச்சர் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா?


ட்விட்டர் 2.0 தி எவ்ரிதிங் ஆப்


தொலைபேசி எண்ணைப் பகிராமலேயே உலகில் உள்ள எல்லோரிடமும் நீங்கள் பேசலாம்," என்று அவர் மேலும் கூறினார். நீண்ட ட்வீட்கள், பணம் செலுத்துதல் மற்றும் encrypted DM ஆகியவை உள்ளடக்கிய “ட்விட்டர் 2.0 தி எவ்ரிதிங் ஆப்” திட்டங்களை எலன் மஸ்க் முன்பு அறிவித்திருந்தார். இந்த கால் வசதிகள், ட்விட்டரை இதே போன்ற அம்சங்களை வழங்கும் Facebook மற்றும் Instagram போன்ற பிற சமூக ஊடக தளங்களுக்கு இணையாக கொண்டு வருகிறது.






சுத்தம் செய்யப்படும் ட்விட்டர்


புதிய அம்சங்களைத் தவிர, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்துள்ளது. இது டிவிட்டரை சுத்தமாகவும் புதுப்பித்ததாகவும் வைத்திருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். மஸ்க் கடந்த ஆண்டு $44 பில்லியனுக்கு வாங்கிய ட்விட்டரில், பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன. "பல ஆண்டுகளாக எந்த செயல்பாடும் இல்லாத கணக்குகளை நாங்கள் அகற்றுகிறோம், எனவே பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவதை நீங்கள் காணலாம்" என்று மஸ்க் ஒரு ட்வீட்டில் கூறினார்.