வாட்ஸ் அப் ‘Accounts Center’ உடன் இணைத்து, இனி ஸ்டேடஸ் அப்டேட்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய இரண்டும் நேரடியாக பகிரும் வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. 


மெட்டா வாட்ஸ் அப்:


வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது. தொழில்நுப்ட வசதிகளை அவ்வபோது வழங்கி வருகிறது. புதிய அப்டேட்களை உருவாக்கும் பணியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதோடு, ஃபேஸ்புக்கில் உள்ள வசதிகளை முதலில் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்தது. இப்போது வாட்ஸப் செயலியிலும் அதை செயல்படுத்துகிறது. 



WhatsApp:வாட்ஸப்பை அக்கவுண்ட்  சென்டருடன்  லிங்க் செய்யும் வசதி அறிமுகம்!


தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம்.


வாட்ஸ் அப்பில் சமீபத்தில் கேமரா ஃபீச்சர்ஸ், கஸ்டம் பேக்ரவுண்ட் ஆகிய வசதிகளை அறிமுகம் செய்திருந்தது. வாட்ஸ் அப் கேமராவில் செல்ஃபி எடுத்து, அதை ஸ்டிக்கராக மாற்றும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கேமராவில் உள்ள ‘  Sticker’ என்பதை க்ளிக் செய்தால் செஃல்பி ஸ்டிக்கராக மாறிவிடும். இந்த வசதி ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு மட்டும் அறிமுகமாகியுள்ளது.  ஐஃபோன் பயனபர்களுக்கு விரைவில் வெளியாகும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 


வாட்ஸ் அப் உரையாடலில் ஸ்டிக்கர் அதிகம் பயன்படுத்துபவர்கள் எனில், உங்கள் நண்பர்களுக்கும் பிடித்த ஸ்டிக்கர்களை இனி அவர்களுடன் பகிந்துகொள்ளலாம்.’sticker pack' ஐ அனுப்பும் வசதி அறிமுகம் செய்தது. 




 ‘Accounts Center’:


ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் இரண்டிலும் ஸ்டோரி அல்லது போஸ்ட் பதிவிட்டால் அதை இரண்டு சமூக வலைதளத்திலும் ஒரே நேரத்தில் பகிரும் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு  ‘Accounts Center' உங்க அக்கவுண்ட் மெட்டா குறிப்பிட்ட சென்டரில் இணைக்கப்பட வேண்டும். இப்போது வாட்ஸ் அப் அக்கவுண்ட்டையும் அக்கவுண்ட் சென்டருடன் இணைந்துவிட்டால் ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் உங்களின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளிலும் அப்லோடு ஆகிவிடும். இதற்கு நீங்கள் உங்களுடைய இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக் அக்கவுண்டை வாட்ஸ் அப் உடன் இணைக்க வேண்டும். 


’WhatsApp Settings > Accounts Center’ என்பதை க்ளிக் செய்து இணையலாம். இது பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. உங்களுக்கு கிடைக்கவில்லை எனில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். 


அடுத்து என்ன?


வாட்ஸ் அப் ஸ்டேடஸில் இசை/ பாடல்கள் இணைக்கும் அப்டேட்டை உருவாக்கி வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஸ்டோரியில் உள்ள வசதிகள் போல வாட்ஸ் அப்பிலும் எதிர்காலத்தில் வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.