ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு எதிராக நோக்கியா தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.அதன் அடிப்படையில் தற்போது ஒப்போ மற்றும் ஒன்பிளஸ்  மொபைல்போன்களை ஜெர்மெனியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


 





தீர்ப்பு:


GizmoChina இன் அறிக்கையின் அடிப்படையில் 4G (LTE) மற்றும் 5G அலைக்கற்றையின்  காப்புரிமைகள் தொடர்பாக நோக்கியா மற்றும் OPPO இடையேயான விவாதங்கள் ஏற்பட்டது. இதில் இருதரப்பிற்கு இடையில் வாதம் முற்றியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் நிறுவனத்திற்கு எதிராக ஜெர்மெனி உள்ளிட்ட  நாங்கு வெவ்வேறு  நாடுகளில் நோக்கியா வழக்கு தொடர்ந்தது. 


ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு எதிராக நோக்கியா தொடுத்த இரண்டு வழக்குகளில்  ஜெர்மெனியின் Mannheim பிராந்திய நீதிமன்றம் Nokia க்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.வெளியான தீர்ப்பின் அடிப்படையில் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஜெர்மெனியில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




வழக்கு விவரங்கள் :


தங்களது WiFi இணைப்புகளை ஸ்கேன் செய்வதற்கான தொழில்நுட்பத்தை பாதுகாக்கும் வசதிக்கான  காப்புரிமை நோக்கியா வசம் உள்ளது. ஜூலை 2021 இல், இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உட்பட ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் Oppo மீது Nokia பல காப்புரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்தது. ஒப்போ தனது சாதனங்களில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் காப்புரிமை பெற்ற நோக்கியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக  குற்றம் சாட்டியுள்ளது. CNBC இன் அறிக்கையின்படி, Nokia இன் நிலையான-அத்தியாவசிய காப்புரிமைகள் (SEPs) மற்றும் SEP அல்லாத UI/UX மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உரிமம் இல்லாமல் Oppo பயன்படுத்துகிறது என்று வழக்கு கூறுகிறது. இரு நிறுவனங்களுக்கிடையில் முன்னர் செய்யப்பட்ட காப்புரிமை உரிம ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததையடுத்து இந்த வழக்கு தொடரப்பட்டது. ஒப்போ மற்றும் நோக்கியா நவம்பர் 2018 இல் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, அது ஜூன் 2021 இல் காலாவதியானது. இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் , சுமூகமான நிலை எட்டப்படவில்லை இதனால் நோக்கியா நிறுவனம் ஓப்போ மற்றும் ஒன் பிளஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தது.


நிரந்தரமாக தடை செய்யப்படுகிறதா ?


ஓப்போவுக்கு எதிரான காப்புரிமை சர்ச்சையில் Nokia தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இருப்பினும்,  இது முதல் தீர்ப்புதான். இப்போதைக்கு, Oppo மற்றும் அதன் சகோதர பிராண்டான OnePlus ஆனது நோக்கியாவின் ஐரோப்பிய காப்புரிமை EP 17 04 731 ஐ மீறும் மொபைல் சாதனங்களை  மட்டும் ஜெர்மனியில் விற்க முடியாது.


ஃபைன் செலுத்திய ஆப்பிள்:


நோக்கியாவின் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை பிற நிறுவனங்கள் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. முன்னதாக நோக்கியாவிற்கு சொந்தமான நிறுவனங்களான NSN மற்றும் Alcatel-Lucent ஆகியவற்றின் காப்புரிமைகளை ஆப்பிள் மீறுவதாக நோக்கியா குற்றம் சாட்டியது. அந்த வழக்கில் இரு தரப்பும் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆப்பிள் நிறுவனம் நோக்கியாவிற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலரை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.