பிரபல நோக்கியா நிறுவனம் கடந்த ஆண்டு Nokia G10 என்னும் மொபைலை சந்தைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக Nokia G11 என்னும் மொபைலை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய வெளியீட்டின் அப்டேட் வெர்சனாக பார்க்கப்படுகிறது.Nokia G11 மொபைலானது 3GB RAM மற்றும் 32GB உள்ளீட்டு மெமரி வசதி கொண்ட பட்ஜெட் மொபைலாக களமிறங்கியுள்ளது. இதன் அடுத்த வெர்சன் 4GB RAM ஐ கொண்டு இயங்குகிறது. வசதிகளை பொருத்தவரையில் நோக்கியா G11 ஆனது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் இயங்குகிறது . 6.5 இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை 20:9 என்னும் விகிதத்தில் 90Hz ரெஃப்ரஷிங் ரேட்டை கொண்டுள்ளது. தொடு திரையின் சென்சார் அளவீடானது 180Hz ஆக உள்ளது.
நோக்கியா G11 Unisoc T606 SoC என்னும் புராஸசர் வசதியை கொண்டிருக்கிறது. Nokia G11 ஆனது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. அதில் 2-மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். மேலும் கேமராவுடன் எல்இடி ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. அதே போல 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வசதியும் கிடைக்கிறது. உள்ளீட்டு மெமரி குறைவாக இருந்தாலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரையிலும் நினைவகத்தை நீட்டித்துக்கொள்ளலாம். இது தவிர அடிப்படை வசதிகளான 4G LTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத்,FM ரேடியோ, USB டைப்-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இது தவிர நவீன fingerprint sensor வசதிகளும் கிடைக்கின்றன.
நோக்கியா G11 ஆனது 5,050mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரையில் பேட்டரி திறன் இருப்பதாக நோக்கியா உறுதியளித்துள்ளது. விலையை பொருத்தவரையில் மேலை நாடுகளில் கிட்டத்தட்ட இந்திய ரூபாயில் தோராயமாக 10200 என்னும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. லண்டன் மற்றும் அரபுநாடுகளில் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது.விரைவில் இந்திய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.