இன்றையக்காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு  ஏற்ப மக்களுக்கும் அதனைப்பயன்படுத்தி வாழத்தொடங்கிவிட்டனர். குறிப்பாக காய்கறிகள் தொடங்கி ஆபரண நகைகள் வாங்க வேண்டும் என்றாலும் யாரும் கையில் பணம் எடுத்துச்செல்லவதில்லை. அதற்கு மாறாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள்தான் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட மக்கள் மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மக்கள் கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனையை கையாளத்தொடங்கிவிட்டனர். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தே ஆன்லைனின் டிரஸ், மொபைல் போன்ற பொருள்களை ஆர்டர் செய்து வாங்கிய நிலையில் இந்த முறை அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும் கொரோனா அச்சத்தின் காரணமாகவும் பணம் எடுப்பதற்காக மக்கள் வெளியில் செல்லாத நிலையில், அவர்களுக்கு இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைதான் பேருதவியாக இருந்தது.



ஆனால் இதன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்றால், இன்டர்நெட் சேவை வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போனில் கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் உங்களால் Google Pay, PhonePe, Paytm, Airtel Payments Bank, Amazon Pay மற்றும் பல தளங்களில பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. தற்போது இதைப்பற்றிய கவலை இனி இல்லை. இன்டர்நெட் வசதி இல்லாமலேய நாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகைளை மேற்கொள்ளமுடியும். இதோ வழிமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்..


இண்டர்நெட் சேவை இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்பும் முறை:


படி 1: உங்களது மொபைலில் நீங்கள் UPI கணக்கை உருவாக்கவில்லை என்றாலும் பணத்தை அனுப்ப முடியும். அதற்கு முதலில் நீங்கள்  BHIM பயன்பாட்டில் உங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். இதற்கு சரியான தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.


படி 2 :  அடுத்து உங்களது மொபைலில் '*99#'  என்ற எண்ணிற்கு கால் செய்யவும். பின்னர் பணம், அனுப்புதல், பணம் பெறுவதற்கு, போலன்ஸ் தொகை எவ்வளவு என சரிபார்க்க, சுய விபரம் ,நிலுவையில் உள்ள கோரிக்கைகள், பண வரித்தனைகள் மற்றும் UPI PIN கொண்ட ஏழு விருப்பங்களைக்கொண்ட மெனுவிற்கு உங்களை அழைத்துச்செல்லும்.


படி 3: பின்னர் நீங்கள் பணம் அனுப்பவேண்டும் என்றால், 1 என எண்ணினைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறை உங்களது UPI ID, வங்கி கணக்கு மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு அல்லது தொலைப்பேசி எண்ணைப்பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கிறது. எனவே உங்களுக்கு என்ன முறையை மேற்கொள்ள வேண்டுமோ? அந்த முறையை தேர்வு செய்துகொள்ளவும்.


படி 4: இதனையடுத்து நீங்கள் UPI ஐ தேர்வு செய்தால், யாருக்கு பணம் அனுப்பப்போகிறோமோ? அவர்களது UPI ID யை உள்ளிட வேண்டும். இந்த முறையில் நீங்கள் வங்கிக்கணக்கைத் தேர்வு செய்தாலும் மற்றும் தொலைப்பேசி எண்ணை பயன்படுத்தி பணம் அனுப்ப வேண்டும் என்றால்  பயனாளியின் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை உள்ளிட வேண்டும்


படி5: இதன்பின்னர் Google Pay, PhonePe, Paytm, Airtel Payments Bank, Amazon Pay போன்ற எந்த டிஜிட்டல் பரிவரத்தனைத் தளத்தைப் போலவே நீங்கள் எவ்வளவு தொகை பரிமாற்றம் செய்ய இருக்கிறீர்களோ? அந்த தொகையை உள்ளீடு செய்துகொள்ள வேண்டும்.


படி 6:  இறுதியாக உங்களது UPI பின் எண்ணை உள்ளிடூ செய்ய வேண்டும். இதனையடுத்து உங்களது டிஜிட்டல் பணவர்த்தனையை முடிப்பதற்கு “send”( அனுப்பு) என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது எந்த இணைய வசதியும் இல்லாமல் பரிவர்த்தனை முடிந்துவிட்டது. இந்த சேவையையை நீங்கள் பயன்படுத்துவதற்கு 50 பைசா அளவிலேயே செலவாகும்.



எனவே இனிமேல் உங்களிடம் Google Pay, PhonePe, Paytm, Airtel Payments Bank, Amazon Pay போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இணைய வசதி இல்லாமல் இருந்தாலும் மேற்கண்ட வழிமுறை இனி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.