கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றன. திரைப்பட தயாரிப்பாளர்களும் தாங்கள் தயாரித்த திரைப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்டனர். 


கொரோனா பரவல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. மக்களிடம் தற்போதும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  


அதன்படி பார்வையாளர்களை கவர நெட்ப்ளிக்ஸ் பல அப்டேட்களை கொடுத்து வருகிறது. அதன்படி தற்போது ‘Two Thumbs up' என்ற அம்சத்தை கொண்டு வந்துள்ளது நெட்பிளிக்ஸ். பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாகவும், படம் பார்க்கும் விதத்தை எளிதாக்கும் விதமாகவும் இந்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. 




'Two Thumbs up' என்றால் என்ன?


தற்போது நெட்ஃபிலிக்ஸில் தம்ஸ் அப், தம்ஸ் டவுன் என்ற இரண்டு அம்சங்கள் உள்ளன. ஏதாவது படம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் 'தம்ஸ் அப்' கொடுக்கலாம். அதற்கு எனக்கு பிடித்திருக்கிறது என அர்த்தம். அதேபோல், உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்றால் 'தம்ஸ் டவுன்' கொடுக்கலாம். அதன் அப்டேட்டாக இப்போது டபுள் தம்ஸ் அப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்றால், இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று அர்த்தம். 


ஒரு வீடியோவுக்கு Two Thumbs Up கொடுத்தீர்கள் என்றால், அதே ஜார்னரில் உங்களுக்கு அடுத்தடுத்து ப்ரிவியூ கொடுக்கப்படும். அல்லது அதே இயக்குநர்கள் படைப்புகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்படும். இதன்மூலம் பார்வையாளர்களுக்கு அவர்களின் ரசனைக்கு ஏற்பவே படைப்புகளை கொடுக்க முடியும் என நெட்பிளிக்ஸ் கூறுகிறது. 


முன்னதாக, ஓடிடி தளங்கள் தங்களது சந்தாக்களின் விலையை அதிகரித்து வந்த நிலையில்,  நெட்பிளிக்ஸ் தனது சந்தாக்களின் விலையை அதிரடியாக குறைத்தது.நெட்பிளிக்ஸ் தளத்தில் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் உள்ளிடவற்றை மொபைல், டேபுளட், டிவி அல்லது லேப்டாப்பில் பார்ப்பதற்கான அடிப்படை சந்தா விலை மாதத்திற்கு முன்பு 499 ரூபாயாக இருந்தது. அந்த சந்தாவின் விலை தற்போது 199 ரூபாயாக குறைத்தது. 


அதே போல நிகழ்ச்சிகளை ஹெச்.டி குவாலிட்டியில் ஒரே நேரத்தில் இரண்டு திரையில் பார்ப்பதற்கான மாத சந்தா விலை முன்பு 649 ரூபாயாக இருந்தது. அதன் விலை  499 ரூபாயாக குறைக்கப்பட்டது. இவற்றுடன் அல்ட்ரா ஹெச்.டி குவாலிட்டியில், ஒரே நேரத்தில் நான்கு திரைகளில் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கான மாத சந்தா 799 ரூபாயிலிருந்து 649 ரூபாயாக குறைக்கப்பட்டது


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண