Motorola Edge 20 மற்றும் Motorola Edge 20 Fusion ஆகிய மாடல்கள் இரண்டும் மூன்று வகையான பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. இவை இரண்டுமே தூசு மட்டும் தண்ணீர் ரெசிஸ்டண்ட் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. Motorola Edge 20 மாடலானது OnePlus Nord 2, Vivo V21 மற்றும் Samsung Galaxy A52 ஆகிய மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, Motorola Edge 20 Fusion மாடல் OnePlus Nord CE, Samsung Galaxy M42 மற்றும் Mi 10i ஆகிய செல்போன் மாடல்களுக்கு நேரடி போட்டியாக் இருக்குமென கணிக்கப்படுகிறது.
விலை நிலவரம்:
Motorola Edge 20 விலையை பொருத்தவரை இந்தியாவில் ரூ. 29,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலையாகும். இந்த மாடல் பிளிப்கார்ட் மற்றும் சில முன்னணி செல்போன் விற்பனை செய்யும்கடைகளிலும் ஆகஸ்ட் 24 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
Motorola Edge 20 Fusion விலையை பொருத்தவரை இந்தியாவில் ரூ.21,499 முதல் தொடங்குகிறது. ஸ்டோரேஜ் மற்றும் ரேம் அளவைப் பொருத்து விலையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 6GB + 128GB மாடல் ரூ.21,499க்கும், 8GB + 128GB மாடல் ரூ.22,999க்கும் விற்பனையாகவுள்ளது. இரு வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கப்பெறும். இந்த மாடல் ஆகஸ்ட் 27 முதல் ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி செல்போன் விற்பனை கடைகளில் கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
Motorola Edge 20:
இந்த மாடலில் டிஸ்பிளே வழக்கமான ஸ்மார்ட்போன்களில் அளவாகவே உள்ளது. அதன்படி 6.70 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமராவை பொருத்தவரை 32 மெகாபிக்ஸலாக உள்ளது. இதனால் தெளிவான செல்ஃபி போட்டோ, வீடியோ கால் வசதியை பெறலாம். பின்பக்க கேமராவை பொருத்தவரை 108 மெகாபிக்ஸல்+16மெகாபிக்ஸல்+8மெகாபிக்ஸல் என்ற 3 வகை கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி கெபாசிட்டி 4000mAh ஆக உள்ளது. இதனால் நல்ல பேட்டரி லைஃப் கிடைக்கும். அதேபோல் சார்ஜரும் 30W டர்போபவர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் எடை 163 கிராம் ஆகும். ஆண்ட்ராய்டு 11ம், 1080x2400 பிக்ஸல் ரெசோலேஷனும் கொண்டுள்ளது. Qualcomm Snapdragon 778G பிராஸசர் கொடுக்கப்பட்டுள்ளது.
Motorola Edge 20 Fusion:
இந்த மாடலும் Motorola Edge 20 மாடலுக்கான டிஸ்பிளே அளவையே கொண்டுள்ளது. அதன்படி 6.70 இன்ச் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவும் Motorola Edge 20மாடலை போலவே கொடுக்கப்பட்டுள்ளது. 32 மெகாபிக்ஸல் முன்பக்க கேமராவும், 108 மெகாபிக்ஸல்+16மெகாபிக்ஸல்+8மெகாபிக்ஸல் என்ற 3 வகை பின்பக்க கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி கெபாசிட்டி 5000mAhஆக உள்ளது. MediaTek Dimensity 800U பிராஸசர் கொடுக்கப்பட்டுள்ளது.