இந்திய சந்தையில் தற்போது பட்ஜெட் போன் என்பதே ரூ.15ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் என்ற நிலை உள்ளது. பிரபல செல்போன் நிறுவனங்களும் பட்ஜெட் அளவை கணக்கில் கொண்டே செல்போனை இந்திய சந்தையில் இறக்குகின்றன. அதன்படி இந்த Moto G60 மாடலும் பட்ஜெட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாடல்  6GB RAM + 128GB ஸ்டோரேஜ் என்ற வகையில் ரூ.17 ஆயிரத்து 999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு வெவ்வேறு வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கப் பெறுகிறது. பிளிப்கார்ட் வெப்சைட்டில் இன்று முதல் இந்த  Moto G60 மாடல் விற்பனை ஆகிறது.




சிறப்பம்சங்கள்:


இந்திய பயனாளர்களை கவரும் விதமாக பெரிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 6.80 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. கேமராவைப் பொருத்தவரை முன்பக்க கேமரா 32 மெகா பிக்ஸல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே செல்ஃபி பிரியர்களுக்கு இந்த செல்போன் சரியான வகையில் இருக்குமென தெரிகிறது. பின்பக்க கேமராவைப் பொருத்தவரை 108+8+2 மெகா பிக்ஸல்கள் கொண்ட 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 6ஜிபி ரேம் என்பதால் கேமிங் செயல்பாடுகளுக்கு இந்த போன் வேகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முக்கியமாக பார்க்கப்படும் பேட்டரி கெபாசிட்டியும் 6000 mAh ஆக உள்ளது. Android 11 os, 1080x2460 பிக்ஸல்கள் ரெசலோஷன் என சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் சி டைப் சார்ஜர், பின்பக்க விரல்ரேகை சென்சார் என பல வழக்கமான சிறப்பம்சங்களையும் இந்த மாடல் கொண்டுள்ளது.