பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி52 ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது.


ஸ்மார்ட்ஃபோன் பிரியர்களால் எதிர்பார்க்கப்பட்ட, அதிக வசதிகள் கொண்ட, பட்ஜெட்டுக்குள் அடங்கும் ஸ்மார்ட் போனான மோட்டோ ஜி52 கடந்த 2 நாள்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியான நிலையில், இன்று முதல் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட் போனானது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 680 ப்ராசஸர், 5000 மில்லி ஆம்பியர்/மணி பேட்டரி ஆகியவற்றைக் கொண்டது.




இது பட்ஜெட் போன் என்று கூறப்பட்டாலும் இந்த ஃபோனில் இருக்கும் சிறப்பம்சங்கள் அதிக விலை கொண்ட போனுக்கு ஒப்பானவையாக இருக்கின்றன. 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த போனில் டிஸ்ப்ளேவின் மீதே செல்ஃபி கேமரா அமைந்திருக்கிறது. ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 680 ப்ராசஸரையும், 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக 5000 mAH பேட்டரி கொண்ட இந்த போன் 30 வாட்ஸ் திறன் கொண்ட வேகமான சார்ஜிங் வசதியைக் கொண்டிருக்கிறது.




ஆண்ட்ராய்ட் 12 இயங்கு தளத்தைக் கொண்டு இயங்கும் இந்த போனானது, மோட்டோரோலா நிறுவனத்தின் MyUX-ஐயும், டால்பி அட்மாஸ் ஒலியை சப்போர்ட் செய்யும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்  மற்றும் ஃபிங்கர் ப்ரிண்ட் சென்ஸாரைக் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 50 மெகாபிக்ஸல் கேமராவுடன், 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் டெப்த் சென்ஸிங் கேமராவையும் கொண்டுள்ளது.




 


மேலும், 3.5எம்எம் ஆடியோ ஜாக் , நீர் பட்டால் அதை உள்வாங்காத ஐபி52 தரத்திலான ஃபோனின் மேற்பகுதி ஆகியவை உள்ளன. இந்த போனானது போர்சிலெய்ன் ஒயிட் மற்றும் சார்கோல் க்ரே ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது.




இதன் விலையைப் பொறுத்தவரை 4ஜிபி வேரியன்ட் 14,499 ரூபாய்க்கும், 6ஜிபி வேரியண்ட் 16,499 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  ஹெச்டிஎஃப்சி வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்தினால் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது.