உலக அன்னையர் தினத்தை கொண்டாடும் வகையில் ”கூகுள் டூடுல்” இன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் சர்ச் இஞ்சினின்  முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ள டூடுலில், அன்னையரை போற்றும் வகையில் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


அம்மாக்களின் பங்களிப்பினை கார்டூன் வாயிலாக கதையாக வெளிப்படுத்தி உள்ளது. ஒரு ஜிஃபி வடிவ (GIF) டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அன்னை, தனது குழந்தைக்கு பிரேய்ல் மொழி அதாவது கண் பார்வை திறன் அதிகம் இல்லாதவர்கள் பயன்படுத்தும் மொழியை சொல்லிக் கொடுப்பதுபோல்  வடிவமைக்கப்பட்டுள்ளது.


இருவம் இணைந்து செடி நடுவது, கை கழுவவது உள்ளிட்ட பொறுப்புகளை அன்னை தன் குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில் படங்களை வெளியிட்டுள்ளது.




 



பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் இந்தியா உள்ளிட்ட அதிகமான நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை (இன்று) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


 






உலக அன்னையர் தினத்தின் வரலாறு பண்டைய கிரேக்க மற்றும் ரோமன் சாம்ராஜ்ஜியத்தின் போது நிகழ்ந்திருக்க கூடும் என்ற ஆதாரங்கள் இருக்கின்ற போதும், நவீன உலக அன்னையர் தினக் கொண்டாட்டம்  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் தான் தொடங்கியதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் அன்னா ஜார்விஸ் என்பவரால் 1908 இல் தனது தாயை கொண்டாடும்விதமாக அறிமுகப்படுத்தப் பட்ட அன்னையர் தினம் குறிப்பாக குடும்பங்கள் மற்றும் அது சார்ந்த உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டே உருவாக்கப் பட்டது.


பல வருடங்களாக  அன்னையர் தினத்திற்காக இவருடைய பிரச்சாரங்கள் தொடர்ந்ததை அடுத்து 1914 இல் வெற்றிகரமாக அமெரிக்காவில் தேசிய அன்னையர் தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் வூட்ரோவ் வில்சன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2 ஆவது ஞாயிற்றுக் கிழமையை தேசிய அன்னையர் தினமாக பிரகடனப்படுத்தினார். பின்னாளில் பல சர்வதேச நாடுகள் இதே வழிமுறையைப் பின்பற்றி அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றன.  


 


 


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண