உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள பாந்தா. இந்த பகுதியில் 49 வயதான கூலித்தொழிலாளி ஒருவர் வசித்த வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த கூலித்தொழிக்கு மதுப்பழக்கம் இருந்துவந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் இவர் தனது மகள்களிடம் சண்டையில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.


இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அந்த கூலித்தொழிலாளி வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர் வீட்டில் தனியாக இருந்த தனது மூத்த மகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமையால் அந்த 19 வயது இளம்பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.




இந்த கொடுமையை தனது தங்கையிடம் கூறி அந்த இளம்பெண் கதறி அழுதுள்ளார். இந்த சூழலில் அதற்கு அடுத்த நாள் கடுமையான மன உளைச்சலில் இருந்த அந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட அந்த இளம்பெண்ணின் தங்கை தனது அக்காவிற்கு நேர்ந்த கொடுமையையும், அவரது அக்கா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தூக்கிட்டுக் கொண்டதால்தான் அந்த பெண் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளதாகவும், அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், பிரேத பரிசோதனை அடிப்படையில் உயிரிழந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா? என்று தெரியவரும் என்றும் போலீசார் கூறினர். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ப்பட உள்ளது என்றனர். மேலும், அந்த கூலித்தொழிலாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 




மதுபோதையில் பெற்ற தந்தையே மகள் என்றும் பாராமல் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண