Xiaomi நிறுவனத்தின் 15 சீரிஸ் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Ultra ஆகிய மாடல் ஸ்மாட்ஃபோன்கள் சிறப்புகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

ஸ்மாட்ஃபோன் சந்தையில் மக்களின் பயன்பாடு மற்றும் தேவைக்கு ஏற்ப பல்வேறு வசதிகளுடன் புதிய மாடல் மொபைல்கள் வெளியாகி வருகிறது. 

சீனாவினை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomi நிறுவனம்  Xiaomi 15 Ultra மற்றும் Xiaomi 15 ஆகிய புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் எப்போது விற்பனைக்கு கிடைக்ககும்? 

Continues below advertisement

கேமரா சிறப்பம்சங்கள்:

AI தொழில்நுட்பத்தில் அதிநவீன வசதிகளுடன் Xiaomi 15 சீரிஸ் மாடல்களில்  Leica டியூன் செய்யப்பட்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.  200MP Leica டெலிஃபோட்டோ லென்ஸ் கொடுக்கப்படுள்ளது. 50MP ப்ரைமரி கேமரா,50MP அல்ட்ரா wide கேமரா, 32MP செல்பி கேமராவுடன்  ஜியோமி 15 அல்ட்ரா மாட்ல கிடைக்கிறது. 

Xiaomi 15 மாடலில்  50MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைட் லென்ஸ், 50MP டெலிபோட்டோ லென்ஸ்,  32MP செல்ஃபி கேமரா உடன் கிடைக்கிறது.

Xiaomi 15 அல்ட்ரா 6.73-இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளே,  120Hz ரெஃப்ரஷ் ரேட்,  3,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் வருகிறது. ஜியோமி 15 6.36-இன்ச் FHD+ AMOLED ஆகியவற்றுடன் கிடைக்கிறது.  இரண்டு மாடலும் Qualcomm Snapdragon 8 Elite ப்ராசசர் உடன் வருகிறது. ஜியோமி 15 12 GB-யும் ஜியோமி 15 அல்ட்ரா 16 GB RAM கொடுக்கப்பட்டுள்ளது.  ஆண்ட்ராய்ட் 15, ஹைபர் ஓ.எஸ். 2.0 அல்ட்ராசோனிக் டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரிண்ட் ஸ்கேனர் ஆகிய வசதிகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  80W அதிவேக சார்ஜிங் உடன் கிடைக்கிறது.

இந்தியாவில் என்ன விலை?

Xiaomi 15 Ultra மாட்ல 16GB of RAM and 512GB ஸ்டோரேஜ் ரூ.1,36,100  இருக்காலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோமி 15 - 12GB+256GB மாடல் விலை ரூ.90,700 ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிராகப்பூர்வ அறிவிப்பில் தெரியவரும். மார்ச் 11-ம் தேதி முதலில் இந்த மாடல்கள் விற்பனைக்கு வரும். 


மேலும் வாசிக்க..

Samsung Galaxy S25 Ultra: சாம்சங் S25 மொபைல் வாங்கும் திட்டம் இருக்கா? தள்ளுபடி அறிவிப்பு!