கடந்த வாரம் இந்தியாவில் ஷாவ்மி நிறுவனத்தின் ஷாவ்மி 12 ப்ரோ மாடல் வெளியிடப்பட்டதுடன், அதன் விற்பனை இன்று நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோனை வாங்க விரும்புபவர்கள் உடனடியாக ஷாவ்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் 8GB RAM அல்லது 12GB RAM வேரியண்ட்களுள் ஒன்றை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
தற்போதைய விற்பனையின் போது ஷாவ்மி 12 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன் வாங்குவதன் மூலம் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளையும், கேஷ்பேக் ஆஃபர்களையும் பெறலாம்.
இந்தியாவில் ஷாவ்மி 12 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனின் விலை 62,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது ஷாவ்மி இணையதளத்தில் இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோனை வாங்குவோருக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 8GB RAM கொண்ட வேரியண்ட் மாடல் ஸ்மார்ட்ஃபோனை வாங்கும் போது 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும், பில் தொகை செலுத்துவதற்கு ஐசிஐசிஐ வங்கி கார்ட்களைப் பயன்படுத்தினால் 6 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன. மேலும், ஷாவ்மி 12 ப்ரோ மாடலின் 12GB RAM வேரியண்டை இதுபோன்ற சலுகைகளுடன் 56,999 ரூபாய்க்கு வாங்கலாம். வாடிக்கையாளர்களுக்கு விலையில்லா ஈ.எம். ஐ வசதிகளையும் ஷாவ்மி நிறுவனம் அளிக்கிறது.
ஷாவ்மி 12 ப்ரோ 5G மாடலின் டிஸ்ப்ளே 6.73 இன்ச் அளவு கொண்ட E5 AMOLED LTPO 2.0 டிஸ்ப்ளேவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது WQHD+ ரிசொல்யூஷன் வழங்குகிறது. இந்த ஸ்க்ரீனில் Corning Gorilla Glass Victus பொருத்தப்பட்டிருப்பதால் அதனைப் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். மேலும், ஆண்ட்ராய்ட் 12 மூலமாக செயல்படும் MIUI 13 ஆபரேட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட முதல் மாடல்களுள் ஒன்றாகவும் ஷாவ்மி 12 ப்ரோ அமைந்துள்ளது.
இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோனில் Snapdragon 8 Gen 1 சிப் செட் பொருத்தப்பட்டுள்ளதுடன், இதில் 256GB ஸ்டோரேஜ் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் பின் பக்கத்தில் மூன்று கேமரா கொண்ட செட்டப் சேர்க்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சர் வைட் கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார், 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகிய வசதிகள் கொண்ட கேமராக்கள் இவை.
ஷாவ்மி 12 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனின் மற்றொரு சிறப்பம்சமாக அதில் பொருத்தப்பட்டுள்ள டால்பி அட்மாஸ் சப்போர்ட் கொண்ட ஹர்மான் கார்டன் ஸ்பீக்கர்கள் கருதப்படுகின்றன. மேலும் இந்த மாடலில் 4600mAh பேட்டரியும், இதில் வயர் பொருத்தப்பட்டு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், வயர் இல்லாமல் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் அளிக்கப்பட்டுள்ளன.