Continues below advertisement

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 2026-ம் ஆண்டு புத்தாண்டு பரிசாக, பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. அந்த வரிசையில், ஜனவரியில் பல அற்புதமான மொபைல்கள் அறிமுகமாக தயாராக உள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்கள் புத்தாண்டு தொடக்கத்தில் இருந்தே பட்ஜெட் பிரிவில் இருந்து பிரீமியம் சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளன. புத்தாண்டில் நீங்கள் ஒரு புதிய தொலைபேசியை வாங்க விரும்பினால், சந்தையில் பல புதிய ஸ்மார்ட்போன் விருப்பங்கள் கிடைக்கும். ஜனவரியில் எந்த கைபேசிகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதைப் பார்ப்போம்.

Redmi Note 15

Continues below advertisement

சீன நிறுவனமான Xiaomi, அதன் Redmi Note தொடரை மீண்டும் சந்தைக்குக் கொண்டுவருகிறது. Redmi Note 15 ஜனவரி 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இது 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது Snapdragon 6 Gen 3 ப்ராசஸர் மற்றும் 108MP பிரதான கேமராவால் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை சுமார் 25,000 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OPPO Reno 15 Series

OPPO Reno 15 தொடர் ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி 8-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், Oppo Reno 15, Reno 15 Pro, மற்றும் Reno 15 Pro Mini உள்ளிட்ட 3 மாடல்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்ப விலை 40,000 ரூபாய் வரை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மூன்று போன்களும், லேட்டஸ்ட் அம்சங்களுடன் சந்தைக்கு வருகின்றன.

Vivo X300 FE

Vivo X300 FE போன், சமீபத்தில் ஒரு தளத்தில் காணப்பட்டது. இது ஜனவரி மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6.31-இன்ச் OLED LTPO டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது Android 16-ல் இயங்கும் என தெரிகிறது. இது, பின்புறத்தில் 50MP + 8MP + 50MP என மூன்று கேமரா அமைப்புகளையும், செல்ஃபிகள் மற்றும் செல்ஃபி வீடியோக்களுக்காக முன்பக்கத்தில் 50MP லென்ஸையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

Vivo V70

விவோ வி70 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் ஜனவரியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6.5 அங்குல டிஸ்ப்ளே உடன் வரும் இந்த ஸ்மார்ட் போன், 8 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு வகையிலும் 12 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு வகையிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை, சுமார் 45,000 ரூபாயில் இருந்து தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லிஸ்ட் கொடுக்கப்பட்டுவிட்டது. நீங்கள் எந்த ஸ்மார்ட் போனை வாங்குவது என்பதை இப்போதே திட்டமிட்டு, அதற்கான பணத்தை ரெடியாக வைத்திருங்கள்.