விவோ விரைவில் இந்தியாவில் அதன் டி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் கீழ் இரண்டு புதிய போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டில் அறிமுகமான Vivo T1 5Gக்கு அடுத்து இரண்டு புது போன்கள் வெளிவர இருக்கின்றன என ஊடகங்கள் தெரிவித்திருந்தன. தற்போது மேலும் இரண்டு போன்கள் வெளியாக உள்ள நிலையில் இதன் மூலம், விவோ டி-பிராண்டட் வரிசையில் மொத்தம் மூன்று போன்கள் வெளியாகின்றன.
விவோவின் புதிய டி-சீரிஸ் போன்கள் மே மாதத்தில் வெளியிடப்படும் என்று தொழில்துறை வட்டாரங்கள் எங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளன. சாதனங்கள் குறித்த அதிக தகவல்கள் இதுவரை பகிரப்படவில்லை. எங்களுக்குத் தெரிந்ததைப் பொறுத்தவரை, புதிய விவோ போன்கள் வேகமாக சார்ஜ் செய்யும் திறன்களுடன் வரும் மற்றும் அதன் விலை ரூ. 25,000க்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோன்களின் சரியான விவரக்குறிப்புகள் மற்றும் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இன்னும் சில தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம், ஒருவேளை ஒரே கட்டமாகத் தற்போதைக்கு, விவோ T1 5G இல் நாம் காணும் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள், தொலைபேசிகள் எப்படி வடிவமைக்கப்படலாம் என்பதற்கான சாத்தியங்களைத் தற்போதே ஆர்வலர்கள் கணித்து வருகின்றனர். விவோ அண்மையில்தான் அதன் 23 சீரிஸ் ரக மாடலை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.