சீன தயாரிப்பான விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் விவோ எஸ்16 சீரிஸில் எஸ் 16 ப்ரோ, எஸ்16 இ ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ் 16, எஸ் 16 ப்ரோ இரு போன்களுக்கும் இடையிலான வேறுபாட்டை பார்ப்போம்.
விவோ எஸ்15 மாடலின் தொடர்ச்சியாக எஸ் 16 சீரிஸ் சந்தைக்கு வந்துள்ளது. எஸ் 15 மாடல் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமானது. விவோ எஸ் 16 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டது. ரிஃப்ரெஷ் ரேட் 120எச்இஸட்.
ரிசொல்யூஷன் 1080x2400 பிக்சல்களை கொண்டுள்ளது. ஆக்டா கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 870 பிராசசரை கொண்டுள்ளது. 8 ஜிபி ராம் வசதி உள்ளது. இந்த போன் டிரிபிள் ரியர் கேமராவையும், 50 எம்பி ஃபிரன்ட் ஃபேசிங் கேமராவையும் கொண்டுள்ளது.
இதன்காரணமாக வீடியோ கால் மற்றும் செல்ஃபி எடுப்பது ஈஸியாக இருக்கும். 4600எம்ஏஎச் பேட்டரி பவரை கொண்டுள்ளது. இதன்காரணமாக 66வாட்ஸ் வேகத்தில் சார்ஜ் ஏறும். விவோ எஸ்16 இந்திய மதிப்பில் ரூ.32000 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
வென்னிலா விவோ எஸ் 16 மாடல், ப்ரோ வகை போனுடன் போட்டிபோடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ ப்ரோ வகையும் இதே வசதிகளையும் சி சிறப்பம்சங்களையும் கொண்ட மாடல் தான் என்றாலும் சில சிறிய வேறுபாடுகள் வரும்.
6.78 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்பிளே மற்றும் 4600 எம்ஏஎச் பேட்டரி, மூன்று பின்புற கேமரா வசதியை கொண்டுள்ளது.